மேலும் அறிய

Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா - விராட் கோலி மகனுக்கு இந்தப் பெயர் ஏன் தெரியுமா?

Akaay Meaning: விராட் - அனுஷ்கா ஜோடி, தாங்கள் கடந்த பிப்.15ஆம் தேதி ஆண் குழந்தைக்கு பெற்றோரானதாகவும், அகாய் எனும் வாமிகாவின் குட்டித் தம்பியை வரவேற்றுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர்.

விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தங்கள் குழந்தைக்கு 'அகாய்' (Akaay) எனப் பெயரிட்டுள்ளனர்.

விருஷ்கா ஜோடி

கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலக ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஜோடி என்றால் அது விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி தான். 2013ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்தது தொடங்கி, டேட்டிங், காதல் என சில ஆண்டுகள் மீடியா வெளிச்சத்தைக் கவர்ந்து காதல் பறவைகளாக வலம் வந்தனர். விருஷ்கா என சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்க்கப்பட்ட இந்த ஜோடி, கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர். 

தொடர்ந்து 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது அனுஷ்கா கருவுற்றதை மகிழ்ச்சியுடன் கோலி அறிவித்த நிலையில், இருவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தைக்கு பெற்றோராகினார். தங்கள் குழந்தைக்கு இந்துக் கடவுளான துர்காவின் பெயரான ‘வாமிகா’வை பெயராக சூட்டினர்.

இரண்டாவது குழந்தை

இந்நிலையில், தற்போது தங்கள் பெண் குழந்தைக்கு 3 வயது நிரம்பியுள்ள நிலையில், விராட் - அனுஷ்கா தம்பதி  ஆண் குழந்தைக்கு சமீபத்தில் பெற்றோராகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்த விராட் - அனுஷ்கா ஜோடி, தாங்கள் கடந்த பிப்.15ஆம் தேதி ஆண் குழந்தைக்கு பெற்றோரானதாகவும், அகாய் எனும் வாமிகாவின் குட்டித் தம்பியை வரவேற்றுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர்.

View this post on Instagram
 
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

அகாய் என்றால் என்ன?

இந்நிலையில் விராட் - அனுஷ்காவின் மகனின் வித்தியாசமான இந்தப் பெயருக்கான அர்த்தம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி அகாய் என்பது துருக்கியில் இருந்து தோன்றிய இந்தி வார்த்தை என்றும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் உடலை விட மேலானவன், அழிவில்லாதவன் என அர்த்தம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அகாய் என்றால் துருக்கியில் பிரகாசமான நிலா என்றும் பொருள்படுகிறது. இந்நிலையில் விராட் - அனுஷ்காவின் குழந்தைகள் பெயருக்கான அர்த்தம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா இரண்டாம் முறையாக கருவுற்ற தகவல் கொஞ்சமும் கசியாமல் ரகசியமாக வைத்திருக்கப்பட்ட நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் தான் விலகுவதாக விராட் கோலி முன்னதாகத் தெரிவித்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தான் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, குட்டி கோலியை தற்போது அனுஷ்கா - விராட் கோலி தம்பதி வரவேற்றுள்ளனர்.

மேலும் படிக்க: Ranam Aram Thavarel Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதை - வைபவின் ரணம் அறம் தவறேல் விமர்சனம் இதோ!

Mrunal Thakur: கங்கனா வீடுகளை விலைக்கு வாங்கிய மிருணாள் தாகூர்.. எத்தனை கோடி தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Embed widget