மேலும் அறிய

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துள்ள கென்னடி திரைப்படத்தின் டிரெய்லர் இதோ

Kennedy Trailer : அனுராக் கஷ்யப் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துள்ள கென்னடி திரைப்படம்,  பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர்  ஆகிறது

இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த  ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல்   இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர்  ஆகிறது.

‘கென்னடி’  மும்பையை மையமாகக் கொண்டு,  நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின்  மையம்.

படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.

கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய  கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம்  இவை அனைத்தும் இணைந்து,  தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.

படம் குறித்து அனுராக் காஷ்யப்

“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை   உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் ராகுல் பட் கூறியதாவது

“கென்னடி பாத்திரத்தில்  நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும்  நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”

சன்னி லியோன் கூறியதாவது

“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள். 

தலைப்பு செய்திகள்

Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Embed widget