Paradha Review : அனுபமா பரமேஸ்வர் நடித்துள்ல பரதா படம் எப்டி இருக்கு...விமர்சனம் இதோ
தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரன் தர்ஷனா இணைந்து நடித்துள்ள பரதா படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

பரதா திரைப்பட விமர்சனம்
பிரவீன் கான்ட்ரேகுலா இயக்கத்தில் அனுபமா பரவேஸ்வரன் , தர்ஷனா ராஜேந்திரன் , சங்கீதா க்ரிஷ் இணைந்து நடித்துள்ள படம் பரதா. மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் இமயமலைக்கு பயணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் நாயகியாக நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் முன்னதாக தெலுங்கில் தில்லு படத்தில் கிளாமர் காட்டி நடித்திருந்தது பெரும் சர்ச்சையானது. இப்படத்திற்கு பின் தனக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்ததாக சமீபத்தில் அனுபமா பகிர்ந்துகொண்டார். இப்படியான நிலையில் பரதா படம் சினிமாவில் தனது இமேஜை மாற்றும் என உறுதியாக தெரிவித்திருந்தார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமான பரதா படத்தில் நடித்துள்ளார். இன்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. பரதா படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு என்ன விமர்சனம் வழங்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
மூன்று பெண்களை மையமாக வைத்து நகரும் கதை சுவாரஸ்யமாக தொடங்குகிறது. முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் தேவையற்ற காட்சிகள் கதையின் போக்கை கெடுக்கின்றன. முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாவது பாதி சுமார் தான். கதையின் ஐடியா சூப்பராக இருந்தாலும் அதை சினிமாவாக சாத்தியப்படுத்துவதில் நழுவியிருக்கிறார்கள் இயக்குநர்கள். அனுபமா பரமேஸ்வரன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பல இடங்களில் எமோஷ்னல் காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்
I can proudly say #paradha is from TFI. @anupamahere Career best performance and she has poured her heart, soul and everything to the film. @praveenfilms garu brilliant story telling and Showing women's power with so much depth is Just Brilliant Brilliant. Must Watch film ❤️ pic.twitter.com/AeOl3JMRBP
— Nikhil Kumar (@nikvenk) August 22, 2025
Love. Applause. Appreciation. 🫶#Paradha is winning hearts all over with a UNANIMOUS BLOCKBUSTER RESPONSE from the audience 💕
— Paradha (@AnandaMediaOffl) August 22, 2025
Watch it at your nearest cinemas TODAY! ✨@anupamahere @darshanarajend @sangithakrish @AnandaMediaOffl @praveenfilms @VijayDonkada @GopiSundarOffl… pic.twitter.com/PgiFV3ImOz





















