Watch Video: ”மனித குலத்துக்கு கடவுள் கொடுத்த பரிசு ரஜினிகாந்த்” - அனுபம் கேர் பகிர்ந்த வீடியோ
Watch video : பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட போது நடிகர் ரஜினிகாந்த்துடன் அனுபம் கேர் எடுத்துக்கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கூலி' படத்தில் இணைந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே துவங்க இருந்த இப்படத்தின் ஷூட்டிங் ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில் ஜூன் 10ம் தேதி துவங்குவதாக இருந்த படப்பிடிப்பு மேலும் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பிக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் ஏற்கனவே இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளது.
இப்படி அடுத்தடுத்த ஷெட்யூல்களில் பிஸியாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் 9ம் தேதி புது டில்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
சென்னையில் இருந்து அவர் டில்லிக்கு புறப்படும் முன்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் "நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இது மிகப் பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்" என தெரிவித்து இருந்தார்.
ஷாருக்கான், அக்ஷய் குமார், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் கலந்து கொண்ட போது நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் சந்தித்தார்.
இருவரும் சந்தித்து பேசி கொண்டு இருந்த போது நடிகர் அனுபம் கேர் நடிகர் ரஜினிகாந்த் உடன் எடுத்த வீடியோ ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். அதில் "தலைவர், மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த வரம்... தி ஒன் அண்ட் ஒன்லி ரஜினிகாந்த்! ஜெய் ஹோ" என தலைவர் ரஜினிகாந்த் மீது இருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அனுபம் கேர். ரஜினிகாந்த் அவரின் இந்த பாராட்டை பார்த்து சிரிக்கிறார். நடிகர் அனுபம் கேர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
#Thalaivar The God’s Gift to Mankind 🤩🫶🏻
— KarthickPrabhakaran (@KarthiPrabha23) June 11, 2024
The One and Only - #Rajinikanth! Jai Ho! 🫡@AnupamPKher#SuperStar @rajinikanth#SuperStarRajinikanth#ThalaivarNirandharam pic.twitter.com/U6b2fU4W04
அனுபம் கேர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவுக்கு பலரும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மிகவும் எளிமையானவர். கண்ணியம், திறமை, பணிவு, இரக்கம், அன்பு என அனைத்தையும் வெளிப்படுத்த கூடியவர். இருவருமே திரையுலகத்தின் மிகப்பெரிய பொக்கிஷங்கள் என கமெண்ட் மூலம் தெரிவித்து இதயங்களை சிதறவிட்டு வருகிறார்கள்.