Annaatthe Box Office Collection | வசூல் ராஜாவாக அண்ணாத்த..! 19-வது நாளில், இத்தனை கோடி வசூலா?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் உலக அளவில் 238 கோடி வசுல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா விமர்சகர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலக அளவில் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட அண்ணாத்த திரைப்படம் முதல் வாரத்தில் 202.47 கோடி வசுல் செய்தது. 2 வது வாரத்தில் 26.32 கோடி வசுல் செய்தது. மூன்றாவது வாரத்தின் முதல் நாளில் 1.56 கோடியும், இராண்டவது நாளில் 1.70 கோடி வசுல் செய்தது. மூன்றாம் நாளில் 2.62 கோடியும், நான்காம் நாளில் 3.54 கோடியும் வசுல் செய்தது ஆக மொத்தத்தில் 238.21 கோடி வசுல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
#Annaatthe WW Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) November 22, 2021
Week 1 - ₹ 202.47 cr
Week 2 - ₹ 26.32 cr
Week 3
Day 1 - ₹ 1.56 cr
Day 2 - ₹ 1.70 cr
Day 3 - ₹ 2.62 cr
Day 4 - ₹ 3.54 cr
Total - ₹ 238.21 cr#Rajinikanth #KeerthySuresh #Nayanthara
தமிழ்நாடு அளவில் தற்போது 149.24 கோடி வசுலித்துள்ள திரைப்படம் இன்று 150 கோடி தாண்டி விடும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அளவில் முதல் வாரத்தில் 149.24 கோடி வசுல் செய்துள்ள அண்ணாத்த திரைப்படம் 2 வது வாரத்தில் 22.52 கோடி வசுல் செய்தது.
மூன்றாவது வாரத்தின் முதல் நாளில் 1.29 கோடியும், இராண்டவது நாளில் 1.47 கோடி வசுல் செய்தது. மூன்றாம் நாளில் 1.83 கோடியும், நான்காம் நாளில் 2.60 கோடியும் வசுல் செய்தது. ஆக மொத்தத்தில் 148.24 கோடி வசுல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
#Annaatthe TN Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) November 22, 2021
FANTASTIC 3rd weekend
Week 1 - ₹ 119.53 cr
Week 2 - ₹ 22.52 cr
Week 3
Day 1 - ₹ 1.29 cr
Day 2 - ₹ 1.47 cr
Day 3 - ₹ 1.83 cr
Day 4 - ₹ 2.60 cr
Total - ₹ 149.24 cr#Rajinikanth #KeerthySuresh #Nayanthara
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவா இயக்கியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. தீபாவளி வெளியீடாக இத்திரைப்படம் திரைக்கு வந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று தான் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் படத்தின் முதல் காட்சி முடிந்ததும் படம் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்பது தெரிந்தது. ஆனாலும் அண்ணாத்த படத்தை பார்க்க மக்கள் திரையரங்களுக்கு வந்த வண்ணமே இருந்தனர். இந்த நிலையில் அண்ணாத்த உலக அளவில் 238 கோடி வசுல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.