Andre Braugher: ‘ப்ரூக்ளின் 99’ தொடரில் கேப்டன் ஹோல்ட்டாக கலக்கியவர்.. நடிகர் ஆண்ட்ரி ப்ராவர் காலமானார்!
Andre Braugher Passes Away: உலகப் புகழ்பெற்ற தொடரான ‘ப்ரூக்ளின் 99' தொடரில் கேப்டன் ஹோல்ட் எனும் பாத்திரத்தில் நடித்து சிரிக்க வைத்த ஆண்ட்ரி ப்ராவர், இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
Andre Braugher: பிரபல ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான ‘ப்ரூக்ளின் 99’ தொடரில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற நடிகர் ஆண்ட்ரி ப்ராவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 61.
சிகாகோவில் பிறந்தவரான ஆண்ட்ரி ப்ராவர், தொலைக்காட்சி தொடர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான எம்மி விருதினை தன் சிறப்பான நடிப்புக்காக இரண்டு முறை வென்றுள்ளார். ஹோமிசைட் லைஃப் ஆன் த ஸ்ட்ரீட், ப்ரூக்ளின் 99 ஆகிய தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ஆண்ட்ரி ப்ராவர்.
குறிப்பாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற சீரிஸ்களில் ஒன்றான ‘ப்ரூக்ளின் 99’ தொடரில் ‘கேப்டன் ரேமண்ட் ஹோல்ட்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து வயிறு குலுங்க பலரையும் சிரிக்க வைத்தவராக விளங்கினார் ஆண்ட்ரி ப்ராவர். இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் ப்ராவர் காலமாகியுள்ளார்.
“Pain. That’s the feeling I’m feeling” 😣
— Jake Peralta (@3asy1ce) December 13, 2023
Rest in Peace, Captain Raymond Holt! You’ll forever hold a special place in my heart 💔 #NineNine #AndreBraugher pic.twitter.com/AfkzPS6gZy
ப்ரூக்ளின் 99 தொடர் ரசிகர்களை இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இணையத்தில் ரசிகர்கள் ஆண்ட்ரி ப்ராவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.