The Sandman : நெட்ஃப்ளிக்ஸில் ஹிட் அடிக்கும் வெப் சீரிஸ்...ரசிகர்களுக்கு விருந்தாக போனஸ் 2 எபிசோடுகள்!
தற்போது ரசிகர்களுக்காக நெட்ஃப்ளிக்ஸ் போனஸ் ஆக இரண்டு எபிசோடுகளை வெளியிட்டுள்ளது. இது சாண்ட் மேன் ரசிகர்க்ளுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 'தி சாண்ட் மேன்' (The Sandman) எனும் இணையத் தொடர் இன்று (ஆகஸ்ட் 5) வெளியாகி உள்ளது. இந்த தொடர் இணைய வெளியில் பிசியாக இயங்கி வரும் நெட்டிசன்கள் மத்தியில் முன்னதாக பேசுபொருளாகி உள்ளது. இந்தத் தொடர் குறித்த ஓர் அறிமுகத்தை பார்க்கலாம்.
கடந்த 1989-1996 காலகட்டத்தில் நீல் கேமென் (Neil Gaiman) எழுதிய ‘தி சாண்ட் மேன்’ காமிக் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ள தொடர் ’தி சாண்ட் மேன்’
இதனை டிசி காமிக்ஸ் காமிக்ஸ் அக்காலத்தில் புத்தகமாக அப்போது வெளியிட்டிருந்தது. தற்போது டிசி என்டர்டெயின்மென்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் ஸ்டுடியோ இணைந்து இந்த காமிக்ஸை வெப் சீரிஸாக தயாரித்துள்ளன.
மொத்தம் 10 அத்தியாயங்களைக் கொண்ட தொடராக இது வெளிவந்துள்ளது. 6 இயக்குநர்கள் இதில் பணியாற்றி உள்ளனர். இயக்குநர் ஜேமி சைல்ட்ஸ் அதிகபட்சமாக 4 அத்தியாயங்களை இயக்கியுள்ளார்.
இந்தத் தொடரில் பிரதான கதாபாத்திரத்தில் டாம் ஸ்டர்ரிட்ஜ் நடித்துள்ளார். கிறிஸ்ட்டி, பாய்ட் ஹோல்ப்ரூக், கிர்பி ஹோவெல்-பாப்டிஸ்ட், மேசன் அலெக்சாண்டர் பார்க் என பலரும் இதில் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் சுமார் 37 முதல் 54 நிமிடங்களை கொண்டுள்ளதாக தெரிகிறது.
Dreams do come true ✨
— Netflix India (@NetflixIndia) August 19, 2022
A two-part bonus episode of The Sandman is now streaming! pic.twitter.com/3bstNleI3e
பான்டஸி டிராமா ஜானரில் இந்தத் தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது. விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை இந்தத் தொடர் பெற்றுள்ளது. தற்போது தி சாண்ட் மேன் நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்