Amy Jackson: ஏமி ஜாக்சன் திருமணக் கொண்டாட்டம் தொடங்கியாச்சு.. ஃப்ரான்சில் பேச்சிலர் பார்ட்டி.. வைரல் ஃபோட்டோஸ்!
Amy Jackson Wedding: 2022ஆம் ஆண்டு முதல் எட் வெஸ்ட்விக் எனும் ஆங்கில நடிகரை ஏமி டேட்டிங் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 21ஆம் தேதி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன் முதல் படத்திலேயே கவனமீர்த்தவர் நடிகை ஏமி ஜாக்சன் (Amy Jackson).
இங்கிலாந்து நாட்டில் மிஸ் டீன் பட்டம் பெற்ற இவரை இயக்குநர் ஏ.எல். விஜய் தமிழில் அறிமுகப்படுத்த, மறந்துட்டியா எனும் வசனத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி, தன் க்யூட்டான கதாபாத்திரத்தால் ரசிகர்களை ஈர்த்தார். தமிழ் சினிமா மூலம் இந்திய திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்த ஏமி ஜாக்சன், தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
குறிப்பாக தமிழில் இவர் நடித்த தாண்டவம், ஐ, தங்க மகன், 2.0 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனிடையே 2015ஆம் ஆண்டு முதல் ஜோர்ஜ் என்பவருடன் லிவ்விங் டு கெதர் உறவில் இருந்த ஏமி ஜாக்சன், ஆண் குழந்தைக்கு 2019ஆம் ஆண்டு தாயானார். ஆனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2019ஆம் ஆண்டு தங்கள் நிச்சயத்துக்குப் பின் பிரிய, 2022ஆம் ஆண்டு முதல் எட் வெஸ்ட்விக் எனும் ஆங்கில நடிகரை ஏமி டேட்டிங் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தற்போது தனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட்டமாக நடத்தி நண்பர்கள் சூழ ஜாலியாக புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் ஏமி ஜாக்சன். முன்னதாக இதே போல் ப்ரைவேட் ஜெட்டில் தன் பேச்சிலர் பார்ட்டிக்கு புறப்பட்டுச் செல்வது போன்ற புகைப்படங்களையும் ஏமி பகிர்ந்திருந்தார்.
View this post on Instagram
தனது பேச்சிலர் பார்ட்டியை ஃப்ரான்ஸ் நாட்டில் ஏமி ஜாக்சன் கொண்டாடி வரும் நிலையில் விரைவில் திருமணத் தேதியைப் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.