Amy Jackson: மணப்பெண்ணான துரையம்மா! கோலாகலமாக நடந்த எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்!
Amy Jackson : மார்ச் 21ம் தேதி நடந்து முடிந்த நடிகை எமி ஜாக்சன் - பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் 'மதராசப்பட்டினம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தவர் பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன்.
எமி ஜாக்சன்:
ஏற்கனவே இங்கிலாந்தில் மிஸ் டீன் பட்டம் பெற்ற எமி ஜாக்சன் 'மதராசப்பட்டினம்' படத்தில் துரையம்மா எனும் கதாபாத்திரத்தில் கதைக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாயகியை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஏ.எல்.விஜய். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்ற எமி ஜாக்சன் தொடர்ந்து தெறி, தாண்டவம், ஐ, எந்திரன் 2.o உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான "மிஷன் சாப்டர் 1" ஆக்ஷன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.
தமிழ் படங்களில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள எமி ஜாக்சன் கடந்த 2015ம் ஆண்டு ஜோர்ஜ் என்பவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய ஜோர்ஜ் மூலம் ஆண் குழந்தையை பெற்றடுத்தார் எமி ஜாக்சன்.
எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம்:
பின்னர் எமிக்கும் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இருவரும் பல இடங்களில் டேட்டிங் செய்து வந்தார்கள். இந்நிலையில் இருவருக்கும் கடந்த மார்ச் 21ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தடபுடலான விருந்துடன் குதூகலமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி சொல்லும் வகையில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். "எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ, குடும்பத்தை போலவே உலகெங்கிலும் உள்ள அன்பானவர்கள், நேசிக்கும் நபர்களுடன் எங்கள் காதலை கொண்டாடும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
எங்கள் நிச்சயதார்த்த விருந்தை மிகவும் சிறப்பானதாக மாற்றிய நிக்கோலஸுக்கும் அவரின் குழுவுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். ரெஸ்டாரண்டை இந்த அளவிற்கு அழகாக மாற்ற முடியும் என்பதை நாங்கள் எதிர்ப்பாகவே இல்லை" என போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.
View this post on Instagram
எமியின் இந்த போஸ்டுக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களைக்கும் ஹார்ட்டின்களையும் பறக்கவிட்டு வருகிறார்கள். விரைவில் அவர்களின் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.