Amudhavum Annalakshmiyum: அமுதாவுக்கு எதிராக மாயா சதி.. பள்ளி நண்பர்கள் தந்த பல்ப்.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்று!
Amudhavum Annalakshmiyum Oct 05: செந்தில், மாயாவும் உமாவும் ஒளிந்திருப்பதை பார்த்து விடுகிறான். பிறகு மரத்தில் இருக்கும் செம்பருத்திப் பூவை பறித்து அமுதா தலையில் வைத்து விட மாயா கடுப்பாகிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செந்தில் - அமுதா கல்யாண நாளைக் கொண்டாட, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மாணிக்கமும் அன்னமும் மாயாவை வெறுப்பேற்றும் விதமாக “ஈவினிங் கேக் வெட்டனும், நாங்க வீட்டை அலங்காரம் பண்ணி வைக்குறோம்” என்று சொல்ல, செந்தில் அமுதாவுக்கு கன்னத்தில் முத்தம் குடுக்க, மாயாவும் உமாவும் அதைப் பார்த்து வெறுப்பாகின்றனர்.
அடுத்ததாக மாயா உமாவிடம் “நான் இருக்குற வரைக்கும் இது நடக்காது” என சொல்லியபடி செந்திலின் பைக்கை பார்க்கிறாள். அமுதா உமாவிடம் உனக்கும் இன்னைக்கு கல்யாண நாள் தான் என சொல்ல, செந்தில் பைக்கை எடுக்கப் போக வண்டி பஞ்சர் ஆகி இருக்கிறது. “வண்டியை பஞ்சர் ஆக்கிட்டா எங்களால போக முடியாதா” என சொல்லி விசில் அடிக்க, சைக்கிளை ஒருவன் கொண்டு வர, அமுதாவும் செந்திலும் சைக்கிளில் செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாயாவும், கோவிலுக்கு வந்து பூக்கடையில் உள்ள மொத்த பூவையும் வாங்குகிறாள். “அமுதா வந்தா பூவே இருக்காது” என சொல்லிக் கொண்டிருக்க, அமுதாவும் செந்திலும் சைக்கிளில் வந்து பூக்கடையில் கேட்க பூ விற்று விட்டதாக சொல்கிறார். செந்தில் மாயாவும் உமாவும் ஒளிந்திருப்பதை பார்த்து விடுகிறான். பிறகு செந்தில் மரத்தில் இருக்கும் செம்பருத்திப் பூவை பறித்து அமுதா தலையில் வைத்து விட மாயா கடுப்பாகிறாள்.
அடுத்ததாக செந்திலும் அமுதாவிடம் “இதுவரைக்கும் முதலிரவு மட்டும் நடக்கவே மாட்டேங்குது, இதுவரைக்கும் உன்னை 14 தடவை தான் முத்தம் குடுத்துருக்கேன்” என காதலாக பேச, அமுதா அவனிடம் என் கனவை நிறைவேத்தி இருக்கீங்க” என சந்தோஷமாக சொல்கிறாள். அமுதா“பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாயாவை பார்த்து ஏதாவது டீஸ் பண்ணலாமா என யோசிக்கின்றனர்.
உடனே மாணவர்கள் அனைவரும் அவர்களை சுற்றி சுற்றி கோவிந்தா கோவிந்தா என சொல்லி , “உங்க மனசுல நினைச்சது நடக்கனும்னா ஒரு வேண்டுதல் பண்ணனும், ஒரு காலையும் கையும் தூக்கிகிட்டு கோவிந்தா கோவிந்தான்னு சொல்லிக்கிட்டே ஓடனும்” என சொல்ல, இருவரும் நாமம் போட்டபடி கோவிந்தா கோவிந்தா என கோயிலைச் சுற்றி வருகின்றனர். பூசாரி அவர்களிடம் “இது சிவன் கோயில் இங்க வந்து கோவிந்தா கோவிந்தான்னா எப்படி? நீங்க நினைச்ச காரியம் நடக்கும்” என சொல்ல, மாயா புரியாமல் பார்க்கிறாள்.
இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.