Amala Paul : மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய அமலா பால்... கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு... பரபரப்பிற்கு காரணம் என்ன?
கேரளாவில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்குள் நடிகை அமலா பால் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நீலதம்ரா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால் அதற்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய திரைப்படங்களில் தடம் பதித்தார். தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'மைனா' மூலம் தான்.
சர்ச்சையில் சிக்குவது வழக்கம் :
தொடர்ந்து ஜெயம் ரவி, விஜய், தனுஷ், ஆர்யா, விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த அமலா பால் 2019ம் ஆண்டு வெளியான 'ஆடை' திரைப்படம் மூலம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார். பல சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கி தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வந்த அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறையவே தனது சொந்த தயாரிப்பில் 'கடாவார்' திரைப்படத்தில் நடித்தார். சில காலங்கள் இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் டேட்டிங் செய்து வந்த நடிகை அமலா பால் 2014ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த மூன்றே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
View this post on Instagram
கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு :
தற்போது மலையாளம் மற்றும் இந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வரும் அமலா பால் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கேரளாவில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்குள் நடிகை அமலா பால் செல்ல அனுமதி மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்துக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை காரணம் காட்டி அவர் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் நடிகை அமலா பால். மத வேறுபாட்டை காரணம் காட்டி கோயிலுக்குள் செல்ல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகவும் கோயிலுக்கு எதிரில் உள்ள சாலையில் நின்று அம்மனை தரிசிக்கும் படி கோயில் நிர்வாகிகள் அவரை கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் நடிகை அமலா பால். இந்த சம்பவம் திரை உலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.