Allu Arjun National award : தேசிய விருது வென்ற அல்லு அர்ஜூன்.. முதல் தெலுங்கு நடிகர் இவர்தான்: செம குஷியில் ரசிகர்கள்
புஷ்பா பாகம் 1 திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றதன் மூலம், தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு ஹீரோ என்ற பெருமையை பெற்றுள்ளார் அல்லூ அர்ஜூன்.

2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது. தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பாகம் 1) படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு ஹீரோ என்ற வரலாற்று சாதனையை அல்லு அர்ஜூன் படைத்துள்ளார். 68 ஆண்டுகளில் இதுவரை எந்த தெலுங்கு ஹீரோவும் தேசிய விருதை பெறாத நிலையில் அல்லு அர்ஜூன் இந்த சாதனையை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அல்லு அர்ஜூன் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். இருந்தபோதிலும், இவரின் பான் இந்தியா திரைப்படமான புஷ்பா ( பாகம் -1) ஒன்று இவருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் இவர் தேசிய விருதையும் வென்றிருக்கிறார். என்வே அல்லு அர்ஜூன் கரியரில் புஷ்பா திரைப்படம் மிக முக்கியமானதாக மாறி உள்ளது.
அல்லு அர்ஜூன் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வந்தார். அதனால் தான் அவர் ஸ்டைலிஸ் ஸ்டார் என்றும் குறிப்பிடப்படுகிறார். ஆனால் புஷ்பா படத்தில் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். முதலில் சந்தன கடத்த கூலி ஆட்களில் ஒருவராக வரும் அல்லு அர்ஜூன் பின் சந்த கடத்தல் பிஸ்னசில் ஒரு பார்ட்னராக மாறுகிறார். இப்படத்தில் அவர் ஒரு பக்க தோள் பட்டையை உயர்த்தி நடக்கு ஸ்டைல் சற்று வித்தியாசமானதாக இருந்ததுடன் ரசிகர்களையும் கவர்ந்தது. கிளைமாக்ஸ் சீனில் எண்ட்ரி கொடுக்கும் பகத் பாசில் கதாப்பாத்திரம் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்தப் படம் 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் வித்தியாசமான தோற்றத்தையும் ‘புஷ்பா எங்கே?’ என்ற கான்செப்ட் டீசரையும் படக்குழு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது.
இந்த டீசருக்கு மட்டும் ரூ.4 கோடி செலவானதாக தகவல் வெளியானது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை போல பிரம்மாண்ட வெற்றியை பெற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதுடன் புஷ்பா 2 படத்தின் அடுத்தடுத்த விளம்பரத்துக்கு பெரிய தொகையை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

