மேலும் அறிய

ரூ.7.8 கோடி.. 4 கார் பார்க்கிங்.. 2.0 வில்லன் வாங்கிய சொகுசு பங்களாவும்.. சில சூப்பர் தகவல்களும்..

பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் மும்பையில் ரூ.7.8 கோடி மதிப்பில் சொகுசு குடியிருப்பை வாங்கியுள்ளார். அக்‌ஷய் குமாருக்கு தலைப்பு செய்தியாவதின் நுணுக்கம் நன்றாகவே தெரியும்.

பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் மும்பையில் ரூ.7.8 கோடி மதிப்பில் சொகுசு குடியிருப்பை வாங்கியுள்ளார். அக்‌ஷய் குமாருக்கு தலைப்பு செய்தியாவதின் நுணுக்கம் நன்றாகவே தெரியும்.

தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்ததாக இருக்கட்டும், புதிய பட அறிவிப்பாகட்டும் இல்லை குடும்பத்துடனான குதூகலப் பயணமாகட்டும். எதுவாக இருந்தாலும் அதை தனித்துவ செய்தியாக்கிவிடுவார்.

இப்போது அவர் தனது புதிய சொகுசு பங்களாவால் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளார். மனி கண்ட்ரோல் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியின் படி, அக்‌ஷய் குமார் ரூ.7.8 கோடிக்கு பிரம்மாண்ட குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார். இது பங்களா டைப்பாக இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு வகையைச் சேர்ந்த வீடு.

ரூ.7.8 கோடி.. 4 கார் பார்க்கிங்.. 2.0 வில்லன் வாங்கிய சொகுசு பங்களாவும்.. சில சூப்பர் தகவல்களும்..

வீட்டின் மொத்த பரப்பளவு 1878 சதுர அடி. ஜாய் லெஜன்ட் பில்டிங் என்ற பிரபல சொகுசு குடியிருப்பின் 19வது மாடியில் அக்‌ஷய் வீடு வாங்கியுள்ளார். இந்த சொத்தை முறைப்படி கடந்த 7 ஆம் தேதியன்று அவர் பதிவு செய்துள்ளார். 
இந்த செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் சூழலில் இதைப் பற்றி அக்‌ஷய் குமார் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. அக்‌ஷய் குமாருக்கு சொந்தமாக ஏற்கெனவே மும்பை ஜுஹூவில் சொகுசு பங்களா உள்ளது. நம்மூர் நீலாங்கரை பீச் ரிசார்ட்டைப் போன்றது ஜுஹூ பீச் வீடுகள். இது தவிர கோவா மற்றும் மொரீஷியசில் நிறைய சொத்துக்கள் அவருக்கு உள்ளன.

இவை போதாது என்று 7.8 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு குடியிருப்பை வாங்கியிருக்கிறார். இந்த வீட்டிற்கு கார் பார்க்கிங்க் மட்டும் 4 உள்ளதாம். 

பட வாய்ப்பைப் பொறுத்தவரை அக்‌ஷய் குமார் நிறைய சுவாரஸ்யமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். கீர்த்தி சனோனுடன் அவர் நடித்துவரும் பச்சன் பாண்டே படம் வரும் மார்ச் 18ல் ரிலீஸ் ஆகிறது. பிருதிவிராஜ் படத்தில் மனுஷி சில்லாருடன் அவர் நடித்து வருகிறார்.  ஆனந்த் எல்.ராயின் ரக்‌ஷா பந்தன் படத்திலும் நடித்து வருகிறார். அபிஷேக் சர்மாவின் ராம் சேதுவில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நுஷ்ரத் பரூச்சாவும் நடித்துள்ளர். ஓ மை காட் பாகம் 2, கோர்கா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில் கோர்கா படம் ஒரு போர் வீரரைப் பற்றியது. கோர்கா ரெஜிமென்டைச் சேர்ந்த இயன் கார்டாஸோவின் வாழ்வைத் தழுவிய படம் இது.

அடேங்கப்பா என வாயில் விரல் வைக்கும் அளவுக்கு அவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ரோபோ 2.0வில் நடித்ததன் வாயிலாக அவருக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget