Thunivu Gangsta Single: மிரட்டும் இசை... ரிலீசானது "கேங்ஸ்டா" பாடல்....! அஜித் ரசிகர்கள் அதகள கொண்டாட்டம்..!
அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள துணிவு படத்தில் இருந்து, கேங்ஸ்டா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாகவே ஒரு படம் வெளியாகும் முன்னர், பலவிதமான புரமோஷன் வேலைகள் நடக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஹெச். வினோத் - போனி கபூர்- அஜித் கூட்டணி எப்போதும் இல்லாத அளவிற்கு, துணிவு படத்திற்காக பயங்கரமான புரமோஷனில் ஈடுபட்டுள்ளது.
துணிவு:
துணிவு படம் குறித்து அறிவிப்பு வந்தவுடன், அஜித்தின் பைக் ஸ்டில்ஸ், அஜித்தின் புது லுக் ஸ்டில்ஸ் உள்ளிட்ட அப்டேட்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளன. துணிவு படத்தில் அனிருத் குரலில் இடம்பெற்றுள்ள “சில்லா சில்லா”பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து, வெளியான “காசேதான் கடவுளடா” பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது.
All all Fans🔥
— Ghibran (@GhibranOfficial) December 25, 2022
150 minutes to 👉🏼 #A(K)nthem
இந்நிலையில், துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிளான கேங்ஸ்டா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த பாடகரான சபீர் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை, AK ஆந்தம் என இசையமைப்பாளர் ஜிப்ரான் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் கொண்டாடி வரும் கேங்ஸ்டா பாடல் வரிகள் பின்வருமாறு உள்ளன.
When bad happens. Someone will rise from the ashes. Some call him a saviour, some call him #Gangstaa
— Ghibran (@GhibranOfficial) December 25, 2022
The wait is over - A🔥K🔥 The original #Ganstaa is here!
▶️ - https://t.co/ovCYGeUhNu#Thunivu #AjithKumar #HVinoth
🎙️ @ShabirMusic
🖊️ @ShabirMusic & @Viveka_Lyrics pic.twitter.com/qA4jp7khS0
கேங்ஸ்டா பாடல் வரிகள்:
சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
HE'S LIKE A GANGSTA, HE'S A GANGSTA
பகைவனுக்கு இரக்கப்பட்டு
பணிஞ்சுபோற துணிவுகொண்டு
பயணம் செய்யும் குணம்கொண்டவன்
HE'S LIKE A GANGSTA, HELL, HE'S A GANGSTA
நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
HE'S A GANGSTA
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
HE'S A GANGSTA
பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்
கூட GANGSTA
தாலாட்டும் தாய் சீறும்போதும்
WHO THE WHO THE, GANGSTA
I SAID, WHO THE GANGSTA
COM'ON COM'ON சொல்லு
WHO THE GANGSTA
HA HA TELL ME WHO THE GANGSTA
நம்பிக்கை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
IT'S HIM IT'S HIM (GANGSTA)
கடைசி நிமிடம் வரை கரம் கொடுப்பவன்
IT'S HIM IT'S HIM. (I SAID WHO THE GANGISA)
வன்முறை தெரித்தும் கண்ணில்
அமைதி கொண்டவன்
IT'S HIM ITS HIM. (I SAID, WHO THE GANGSTA) வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும்
இறங்குனா HE'S A GANGSTAAA..
GANGSTA, GANGSTA...
NANANAA..
துணிஞ்சா வெற்றி நமதே துணிஞ்சா வெற்றி நமதே
வா பதிலடிதான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு
பார் முடிவில யார். பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு நடய ஒடச்சு பயத்த செரிச்சு' ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள எதிர்த்து நிக்கட்டும்.
IAM GANGSTA