அஜித், விஜய் சேதுபதி, சூர்யா...இந்த ஹீரோ தான் என் படத்துல வில்லன்...ஷங்கர் சொன்னது யாரை தெரியுமா?
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் அர்ஜூன், மதுபாலா நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார்.
அஜித், விஜய் சேதுபதி, சூர்யா ஆகிய 3 பேரில் யாரை வில்லனாக நடிக்க வைப்பேன் என இயக்குநர் ஷங்கர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் அர்ஜூன், மதுபாலா நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். சமூக அவலங்களை தனது கதைகளின் அடிப்படையாக கொண்டு படமெடுக்கும் ஷங்கரின் பட யுக்தி அனைவரையும் கவர்ந்தது. தொடந்து காதலன்,இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 என படங்களை எடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
அவரை முன்னணி இயக்குநர் என்று சொல்வதை விட பிரமாண்ட இயக்குநர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தனது படங்களில் புதுபுது டெக்னிக்குகளை அறிமுகப்படுத்தி நம்மை வியப்பில் ஆழ்த்துவார். தற்போது தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகும் ஷங்கர் அங்கு ராம்சரண் படத்தை எடுத்து வருகிறார். அதேசமயம் கமலை வைத்து இந்தியன் படத்தின் 2 ஆம் பாகத்தையும் இயக்குகிறார். சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஹீரோயினாக அறிமுகமானார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் அப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதற்கிடையில் நேர்காணல் ஒன்றில் அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் நெறியாளர் அஜித், விஜய் சேதுபதி, சூர்யா இந்த 3 ஹீரோக்களில் யாரை உங்களது படங்களில் வில்லனாக நடிக்க வைப்பீர்கள் என கேட்கிறார். அதற்கு ஷங்கர் யோசிக்காமல் விஜய் சேதுபதி என தெரிவிக்கிறார். அவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நல்ல பண்றாரு. அவரின் பங்களிப்பு படத்துக்கு படம் வித்தியாசமாக இருக்குது என கூறியுள்ளார். இதேபோல் உங்களது படங்களில் பிடித்த வில்லன் கேரக்டர் எது என கேட்டு அரங்கநாதர்(முதல்வன்), காசிமேடு ஆதி (சிவாஜி), சிட்டி (எந்திரன்) என ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதற்கு ஷங்கர் சிட்டி என தெரிவிக்கிறார்.
அதிரடியாக வில்லன் என்றால் அது 2.0 படத்தில் வந்த சிட்டி கேரக்டர் தான். ரொம்ப சாஃப்டா, உள்ளுக்குள்ளே வச்சி அட்டாக் பண்ற வில்லன் லிஸ்டில் அரங்கநாதர் தான் பேவரைட் என அவர் தெரிவித்துள்ளார். ஷங்கர் சொல்வதைப் போல விஜய் சேதுபதி தமிழின் டாப் மோஸ்ட் வில்லனாக வலம் வருகிறார். ரஜினி நடித்த பேட்ட, கமலின் விக்ரம், விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதனால் விரைவில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்