இமயமலை பைக் ரைடு! அஜித்துடன் கைகோத்த நடிகை மஞ்சு வாரியர்! வைரல் போட்டோஸ்!
Ajith Kumar Adventure Riding: சென்னையில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு விமானம் மூலம் பயணம் செய்து அங்கிருந்து இமயமலைக்கு நண்பர்களுடன் சாலையில் பயணம் செய்துள்ளார் நடிகர் அஜித்குமார்.
Ajithkumar adventure riding tour to Ladakh : வைரலாகும் தல அஜித்தின் இமாலய பைக்கிங் பயண புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் ஹீரோ அஜித்குமார் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக AK 61 என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபலமான மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு முடிவில் அல்லது 2023ம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். கடைசி கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பைக்கிங் பிரியர்:
இந்த நிலையில் நம்ம தல அஜித்குமார் பைக்கிங் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர் என நம் அனைவர்க்கும் மிக நன்றாகவே தெரியும். ஷூட்டிங் சமயத்திலும் பைக்கிங் செய்யவேண்டும் என்றால் எந்த ஒரு டூப்பும் இல்லாமல் தானே அந்த காட்சிகளில் நடிப்பார் என்பதையும் நாம் அறிவோம். AK 61 படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்ற போதும் நீண்ட பைக் சவாரி குறிப்பாக பாலைவனத்தில் சவாரி செய்துள்ளார் அஜித்குமார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமயமலையில் பைக் பயணம் :
தற்போது AK 61 படப்பிடிப்பில் இருந்து திரும்பிய அஜித்குமார் இமயமலைக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சென்னையில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு விமானம் மூலம் பயணம் செய்து அங்கிருந்து இமயமலைக்கு நண்பர்களுடன் சாலையில் பயணம் செய்துள்ளார் நடிகர் அஜித்குமார். இந்த பைக் பயணத்தை நான்கு நாட்கள் மேற்கொண்டுள்ளார். இமயமலை பயணத்தின் போது அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த பயணத்தில் அஜித்துடன் AK 61 ஹீரோயின் மஞ்சு வாரியாரும் உள்ளார். இந்த இமாலய பயணத்தில் அஜித் பயன்படுத்திய பைக்கில் 'நெவர் எவர் கிவ் இட் அப்' என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளது.
மீண்டும் AK 61 டீம் பாங்காக் பயணம்:
இமாலய பைக் பயணத்தை முடித்து சென்னை திரும்பியதும் AK 61 படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவர் அஜித்குமார் என கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதம் மத்தியில் AK 61 படக்குழுவினருடன் பாங்காக் பறக்க உள்ளார் அஜித். கடைசிகட்ட படப்பிடிப்புகளை முழுவதுமாக முடித்து விட்டு தான் சென்னை திரும்புவார்கள் இந்த படக்குழுவினர் என கூறப்படுகிறது. சுமார் 21 நாட்கள் பாங்காக்கில் ஷூட்டிங் மேற்கொள்ள உள்ளனர். 2023 பொங்கலுக்கு AK 61 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அதே சமயத்தில் தான் இளைய தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படமும் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் தமிழ் சினிமாவில் இரண்டு மாஸ் ஹீரோக்களின் படத்திற்காக காத்திருக்கிறார்கள்.