Ajith AK 62: ஹெச் வினோத் படம் முடிந்து ஏகே 62 படத்துக்கு ரெடி.... தயாரிப்பாளருடன் அஜித்!
அசத்தல் தாடியுடன் நடிகர் அஜித், லைகா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவுடன் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் அஜித் 3ஆவது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் தற்போது நடித்து வருகிறார்.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.
#Ajithkumar𓃵 #AK #Ajith waiting pic.twitter.com/Yz5EeZu0f5
— RK SURESH (@studio9_suresh) August 26, 2022
இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் இன்று முதல் AK 61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியானது. இதனிடையே அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வரும் அஜித்தின் கேஷுவல் லுக் புகைப்படங்கள் சமீபகாலமாக அவரது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.
அந்த வகையில் முன்னதாக தன் ஏகே 61 கெட் அப்பில் அஜித், லைகா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவுடன் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
#AK62 shooting start from Jan 2023.
— AK61 (@AkkshayKiron) August 29, 2022
Movie planning to release for Diwali 2023.#Ajithkumar𓃵 @LycaProductions @VigneshShivN @DoneChannel1 @SureshChandraa @ProRekha pic.twitter.com/OzvdbSiBt3
ஏகே 61 படத்துக்குப் பிறகு அஜித் விக்னேஷ் சிவனுடன் இணைவதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் உரிமையாளருடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்பம் வைரலாகியுள்ளது.
View this post on Instagram
முன்னதாக அஜித் நாடு முழுவதும் பைக் டூர் மேற்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.