அஜித் பிறந்தநாளில் வெளியாகும் வீரம்...தீரா கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
Veeram Rerelease : சிறுத்தை சிவா இயக்கி அஜித் நடித்த வீரம் திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
துணிவு படத்திற்கு பின் அஜித் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது குட் பேட் அக்லி திரைப்படம். உலகளவில் இப்படம் இதுவரை 200 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் இப்படம் 140 கோடி வசூலித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். திரையரங்கில் 10 நாட்களை இப்படம் கடந்துள்ள நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
வீரம் ரீரிலீஸ்
வரும் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் நடித்துள்ள வீரம் திரைப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் ஆக இருப்பதே இந்த தகவல். சிறுத்தை சிவா இயக்கி , தமன்னா , சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. வீரம் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மீண்டும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். சமீபத்தில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது சச்சின் படத்திற்கு போட்டியாக வீரம் படம் வெளியாக இருக்கிறது.





















