மேலும் அறிய

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!

ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எதிர்மறை கருத்துக்களை பதிவிடவில்லை.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய போதே திரைப்படங்களில் இருந்து நடிப்பதில் இருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். விஜய் கட்சி தொடங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கினாலும், அவர் திரைப்படங்களில் இருந்து நடிப்பதில் இருந்து ஒதுங்கியது மிகப்பெரிய வேதனையை உண்டாக்கியது. 

விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல்:

இந்த சூழலில், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் நேற்று வெளியானது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய திரைப்படமான இந்த ஜனநாயகன் பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு நேற்று வெளியானது. இந்த படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ரஜினி - கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவை ஆண்டவர்கள் விஜய் - அஜித் இருவர் ஆவார்கள். ரஜினி - கமல் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தபோத அவரது ரசிகர்கள் மோதிக்கொண்டனர். விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் அதை விட அதிகளவு இருந்து வந்தது. இணைய வளர்ச்சிக்கு பிறகு விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் சமூக வலைதளங்களையே அதிரவைக்கும் அளவிற்கு இருக்கும்.

கடைசி படம் ஜனநாயகன்:

குறிப்பாக, விஜய் படம் வெளியாகும்போது இணையத்தில் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை தாக்குவதும், அஜித் படம் வெளியாகும்போது இணையத்தில் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை தாக்குவதும் வழக்கமாக இருந்து வந்தது. இது மிகவும் எல்லை மீறி செல்வதும் இருந்து வந்தது.

அஜித் ரசிகர்கள் அமைதி:

ஆனால், விஜய் கட்சி தொடங்கிய பிறகு விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் என்பது முற்றிலும் மாயமாகிவிட்டது என்று கூறலாம். இந்த சூழலில், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியான பிறகும் இணையத்தில் அஜித் ரசிகர்கள் எந்தவித எதிர்மறை கருத்தையும் வெளியிடாமல் மிகவும் அமைதியாக ஒதுங்கிக் கொண்டனர்.

விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் இருந்து திரைப்படங்களில் மோதி வந்தாலும், விஜய் கட்சி தொடங்கிய பிறகு அஜித் ரசிகர்களின் ஆதரவு அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் தேவைப்பட்டது. அதற்கு ஏற்றவாறு விஜய் - அஜித் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் பல இடங்களில் காணப்பட்டது. 

ஒதுங்கிக் கொண்ட ஜாம்பவான்கள்:

மேலும், விஜய்க்கு எதிராக திரையுலகில் இருந்து பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைத் தெரிவித்தபோதும் திரையுலகில் அவரது நேரடி போட்டியாளரான அஜித் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, கரூர் விவகாரத்தில் விஜய்யை பலரும் மிகவும் மோசமாக விமர்சித்த சூழலில், அஜித் இந்த விவகாரத்தில் தெரிவித்த கருத்திற்காக விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். 

திரையுலகில் மிகவும் மோசமான முறையில் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் மோதல் நடந்தபோதிலும், அரசியல் ரீதியாக விஜய்யை அஜித் எந்தவொரு வகையிலும் விமர்சிக்காதது விஜய் ரசிகர்களுக்கு அஜித் மீது பன்மடங்கு மதிப்பை உண்டாக்கியது. மேலும், விஜய் அரசியலுக்குச் சென்றுவிட்ட நிலையில், அஜித்தும் கார் ரேஸில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். 

விஜய் ரசிகர்கள் நன்றி:

மிகப்பெரிய ஜாம்பவான்களாகிய இவர்கள் இருவரும் திரையுலகை விட்டு ஒதுங்கியிருப்பதாலும், விஜய்யின் கடைசி படம் என்பதாலும் ஜனநாயகன் படத்தை அஜித் ரசிகர்கள் எந்த விமர்சனமும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டனர். அஜித் ரசிகர்களின் இந்த செயலை விஜய் ரசிகர்கள் பாராட்டியும், நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget