Watch Video : ரசிகரின் பிறந்தநாளில் அஜீத் செய்த சம்பவம் என்ன தெரியுமா..? மகிழ்ச்சிக்கடலில் ஏகே ரசிகர்கள்..!
நடிகர் அஜீத் தன்னுடைய ரசிகருக்கு வாழ்த்து கடிதம் எழுதும் வீடியோவும், அவருக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியதும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜீத். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 62 என்று அழைக்கப்படும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், ரசிகர் ஒருவருக்கு நடிகர் அஜீத் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியதும், அந்த ரசிகரை வாழ்த்தி அஜீத்தே கடிதம் எழுதிய வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அஜீத்தே தொலைபேசியில் வாழ்த்து கூறியதால் அந்த ரசிகர் மகிழ்ச்சிக்கடலில் திளைத்துள்ளார். நடிகர் அஜீத் தனது ரசிகர் லவனிடம், ஹாய் லவன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். ஆரோக்கியமாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள்” என்று வாழ்த்து கூறுகிறார்.
Exclusive Video Of Our Chief #AjithKumar Sir 😍❣️❤️#AK61 #AK62 pic.twitter.com/kiyYpsoa5y
— Ajith Seenu 2 👑 தல..தாய்..தாரம்..²⁸ʸʳˢᴼᶠᴬʲⁱᵗʰⁱˢᵐ (@ajith_seenu) June 29, 2022
பின்னர், அஜீத்திடம் அந்த ரசிகர் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அஜீத் நல்லா இருக்கிறேன் என்றார். அதற்கு அந்த ரசிகர் நீங்கள் நன்றாக இருந்தாலே போதும் நமக்கு என்கிறார். மேலும், அந்த ரசிகருக்கு அஜீத் எழுதிய கடிதத்தில் அன்புக்குரிய லவன் என்று எழுதி தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
அஜீத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாவது என்பது அரிதாகவே இருந்து வந்த நிலையில், தற்போது அஜீத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி வருகிறது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. ஐரோப்பியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜீத்தின் அழகிய புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கலக்கி வரும் நிலையில், தற்போது அஜீத் அவரது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறும் ஆடியோவும், ரசிகரை வாழ்த்தி எழுதிய கடிதமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜீத்தின் ஏகே 61 படத்திற்கான அப்டேட்கள் ஏதும் வெளியாகாவிட்டாலும், அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வருவது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க : Actor Surya: 24 ஞாபகம் இருக்கா? மீண்டும் விஞ்ஞானி ரோலில் களமிறங்கும் சூர்யா.. இந்த முறை இந்த அதிரடி..
மேலும் படிக்க : Vidyasagar Last rites: கணவரின் இறுதிச் சடங்கு: மகளுடன் சேர்ந்து சம்பிரதாயங்களை செய்து முடித்த நடிகை மீனா!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்