மேலும் அறிய

Vidyasagar Last rites: கணவரின் இறுதிச் சடங்கு: மகளுடன் சேர்ந்து சம்பிரதாயங்களை செய்து முடித்த நடிகை மீனா!

நுரையீரல் பாதிப்பால் இறந்துபோன தனது கணவர் வித்யாசாகருக்கான இறுதிச் சடங்கினை மகளுடன் சேர்ந்து செய்து விடை கொடுத்தார் நடிகை மீனா.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று (28/06/2022) இரவு சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இன்று சென்னை பெசன்ட் நகரில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, உடலை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து வித்யாசாகர் அவர்களின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது உடன் சென்ற நடிகை மீனா, தனது கணவரின் உடலுக்கு இறுதிச் சடங்கினை தனது மகள் உடன் இணைந்து  செய்தார். 

கண்ணீர் மல்க, அவர் இறுதிச் சடங்கு செய்ததை கண்டு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், நடிகை மீனாவை தேற்ற முயன்றனர். உடைந்து போன அவர், சடங்குகளை செய்து முடித்து, தனது கணவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார். 

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து இருந்தநிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி காலமானார். 

48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, வித்தியாசாகரின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கணவர் வித்யாசகரின் உடலுக்கு நடிகை மீனா இறுதிச் சடங்குகளை தனது மகளுடன் செய்தார். இந்த காட்சி பார்ப்பவர்களுக்கு கண்ணீரினை வரவழைக்கும் விதமாக உள்ளது. 

நடிகை மீனா கணவர் வித்யாசாகரின்  மரணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனா வீட்டிற்கு நடிகை ரம்பா முதல் ஆளாய் வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் கலா மாஸ்டர், குணசித்திர நடிகை லட்சுமி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று துக்கத்தில் பங்கெடுத்து வருகின்றனர். மேலும், பலர் கொரோனா பரவல் காரணமாக இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக நடிகை மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Invited for G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Spl. Train for Girivalam: கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Invited for G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Spl. Train for Girivalam: கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Embed widget