”அந்த பாட்டுல, அஜித் நேரடியா விஜயை அட்டாக் பண்ணுவாரு “ - பரத்வாஜ் சொன்ன சீக்ரெட்..
”இதில் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை. அதற்கு இசையமைக்கும்பொழுது ஃபன்னாக இருந்தது. வைரமுத்து சாருக்கு சொல்லவா வேண்டும் புகுந்து விளையாடிட்டார்.”
தமிழ் சினிமாவில் காதல் மன்னன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். அமர்க்களம் , ரோஜா கூட்டம் , பாண்டவர் பூமி, ஜெமினி,அசத்தல் , அட்டகாசம் , அசல் ,. ஜே ஜே, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட பன்மொழி சினிமா படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரதுஇ இசையில் , சரண் இயக்கத்தில் கடந்த் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘'அட்டகாசம் ‘ . அந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருப்பார்.
அந்த படத்தில் “இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன....ஏழு கடலும் என் பேர் சொன்னால் உனக்கென்ன...எரிந்து போன சாம்பலில் இருந்து..எழுந்து பறக்கும் பினீக்ஸ் போல...மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன...நான் வாழ்ந்தால் உனக்கென்ன...உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன..உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன...உனக்கென்ன உனக்கென்ன...உனக்கென்ன உனக்கென்ன...உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன..ஏற்றி விடவோ தந்தையும் இல்லை..ஏந்தி கொள்ள தாய் மடி இல்லை..என்னை நானே சிகரத்தில் வைத்தேன்...அதனால் உனக்கென்ன?” என்ற வைரமுத்துவின் வரிகளுடன் பாடல்கள் அமைந்தி்ருக்கும்.
View this post on Instagram
இது குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசிய இசையமைப்பாளர் பரத்வாஜ் . “ உனக்கென்ன பாடல் நடிகர் விஜயை தாக்குவதாகவே இருக்கும். அது அவருக்காக எழுதப்பட்டதுதான். இது எல்லாமே தொழில் ரீதியிலான போட்டிதானே .. இதில் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை. அதற்கு இசையமைக்கும் பொழுது ஃபன்னாக இருந்தது. வைரமுத்து சாருக்கு சொல்லவா வேண்டும் புகுந்து விளையாடிட்டார். அது முழுக்க முழுக்க சரணின் ஐடியாதான்.இப்போ வந்திருந்துச்சு அந்த பாட்டு, பல பில்லியன்களை தொட்டிருக்கும். அதான் சமூக வலைத்தளங்களில் பார்க்கிறேனே. இரண்டு ரசிகர்களும் போட்டிபோடுவதை.
நான் , சரண் மற்றும் வைரமுத்து மூவரும் இணைந்து 12 படங்கள் பண்ணியிருக்கிறோம். தீனா படத்துல அஜித்திற்கு தல என்னும் பெயர் வந்துவிட்டது. அதை வைத்து ஒரு பாடல் எழுத வேண்டும் என்றார் சரண். அதன் பிறகு பிளான் பண்ணோம். இந்த மனிதனை போல யாராவது ஈடாகுமானு எழுத முடிவெடுத்தோம். நானே அந்த பாடலை பாடினேன். ஒரு பிராண்டட் ஹீரோவுக்கு இப்படியாக பாடல் எழுதினால் சிங் ஆகும். அசல் படத்துல அஜித் அப்பா , மகன் இரண்டு ரோல்ல நடிச்சார். அதுல அப்பாவை நினைத்து பாடுவது போல எழுதனும் . அந்த பாடலை வைரமுத்து சிவாஜியை நினைத்துதான் எழுதினார் “ என பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.