Ajith : அஜித்திடம் ஸ்டண்ட் புரொடக்ஷன் கிட் பரிசாக வாங்கிட்டாரா? இவர் யாருன்னு தெரியுதா மக்களே..
துணிவு படத்தில் நடிக்கும் ஜான் கொக்கனுக்கு ஸ்டண்ட் பாதுகாப்பு கிட் ஒன்றை பரிசளித்துள்ளார் நடிகர் அஜித் குமார். ஜான் கொக்கன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பிரமாண்டமான பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் எந்த ஒரு படத்திற்கு இல்லாத அளவிற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. திரையரங்கில் படம் வெளியாவதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

காசேதான் கடவுளடா பாடலுக்கு வெயிட்டிங் :
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'துணிவு' படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியருடன் சமுத்திரக்கனி, பிரேம் குமார், பிக் பாஸ் புகழ் அமீர், பாவனி நடிக்கிறார்கள். இவர்களுடன் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஜி.எம்.குமார் மற்றும் ஜான் கொக்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் இப்படத்தின் 'சில்லா சில்லா' பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் ஒன்றாக இடம் பிடித்ததை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான 'காசேதான் கடவுளடா' பாடல் விரைவில் வெளியாகும் எனும் அறிவிப்பை வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாடலுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#AjithKumar gifted stunt protection Kit to @johnkokken1 👌 pic.twitter.com/3GYADnlC4p
— Rajasekar (@sekartweets) December 14, 2022
ஜான் கொக்கன் பூரிப்பு :
துணிவு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜான் கொக்கன் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஸ்டண்ட் புரொடக்ஷன் கியர் அணிந்தவாறு புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். இதை நடிகர் அஜித் குமார் ஜான் கொக்கனுக்கு பரிசளித்துள்ளார் என்பதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "எனது சூப்பர் ஹீரோ அஜித் குமார் சார் வழங்கிய சூப்பர் பவர் ஸ்டண்ட் பாதுகாப்பு கிட்" என ஒரு குறிப்பையும் பதிவிட்டுள்ளார். ஜான் கொக்கன் இதற்கு முன்னர் அஜித் நடிப்பில் பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்ற 'வீரம்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram





















