Aishwarya Rajinikanth : பிரிவுக்கு பின், முதன்முறையாக தனுஷ் ட்வீட்டை லைக் செய்த ஐஷ்வர்யா… இதுதான் காரணமா?
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் அனைவரும் ஆச்சர்யத்துடன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினி ஐஷ்வர்யாவிடம் பேசி கன்வின்ஸ் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நடிப்பில் பல அவதாத்தை காட்டி தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று வருகிறது. நடிகர், இயக்குனர், பாடகர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள தனுஷ் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷ் அதன்பிறகு மீண்டும் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் நடித்தார். இந்தியில் வெளியான இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஆக்ஷன் திரில்லர் கதைகளை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது.
தனுஷ் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்திருப்பார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் வெளியான மாறன் நேரடியாக ஓடிடியில் ரிலீசானது. தனுஷின் சமீபத்திய படங்களில் இருந்து சற்று வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தமிழ்,இந்தியைத் தொடர்ந்து தெலுங்கிலும் நேரடியாக தனுஷ் நடிக்கிறார். அந்தப் படத்திற்கு வாத்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. அதேசமயம் ஹாலிவுட்டிலும் கால் தடத்தை பாதிக்கும் தனுஷ் தி கிரே மேன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஷ்வர்யா, கடந்த 2004-ல் நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். பின்னர் 2012-ல் 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் ஐஷ்வர்யா. இதில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இதைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கினார் ஐஸ்வர்யா.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனுஷ் - ஐஷ்வர்யா இருவருக்குள்ளும் கணவன் - மனைவிக்குள் வந்திருக்கும் சாதாரண சண்டை தான் வந்துள்ளது எனவும், வேறுபாடுகளை களைந்து அவர்கள் விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் பிஸியானார். ஐஸ்வர்யா மியூசிக் வீடியோ இயக்குவதில் தனது கவனத்தை செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலையில் பிஸியாகியுள்ள ஐஸ்வர்யா சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு சில தினங்களாக ட்விட்டரில் ஓய்வில்லாமல் இயங்கி வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் மாறன் திரைப்பட வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார், “இனி மாறன் திரைப்படம் உங்களுடையது, ஓம் நமச்சிவாய.” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்ததுதான் கோலிவுட் ஹாட் டாபிக். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் அனைவரும் ஆச்சர்யத்துடன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினி ஐஸ்வர்யாவிடம் பேசியிருப்பதாகவும், அவர் பேசியதை தொடர்ந்து தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் இதற்கு தனுஷ் தான் பிடி கொடுக்கமால் இருக்கிறார் என்றும் அரசல் புரசலாக கூறப்பட்டது. அதன்படி, தற்போது தனுஷின் டீவீட்டை ஐஸ்வர்யா லைக் செய்திருப்பது ரசிகர்களுக்கு மேலும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. இருவருக்கும் இடையேயுள்ள இந்த நிலை மீண்டும் இணைவதற்கான அறிகுறியா? அல்லது வெறும் நட்புதானா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.