Thalapathy 68: "6 மணிக்கு ரெடியா இருங்க” - விஜய்யின் “The Greatest Of All Time" அடுத்த அப்டேட் ரிலீஸ்..!
Thalapathy 68 : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில் இன்றும் அப்டேட் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் 2023ம் ஆண்டில் வெளியான வாரிசு மற்றும் லியோ திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் 'லியோ' படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் தற்காலிகமாக தளபதி 68 என பெயரிடப்பட்டது.
பிகில் படத்துக்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர். மல்டி ஸ்டார்ஸ் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்த முனி ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார்.
தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக இலங்கையில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற அப்டேட் போஸ்டருடன் வெளியானது. வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் சிலுவை அடையாளம் இடம் பெற்று இருப்பது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இதே போன்ற ஒரு குறியீடு வாரிசு மற்றும் லியோ படத்தின் போஸ்டரிலும் இடம் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Our Thalapathy is the
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023
Greatest Of All Time 🔥🔥🔥🔥#GreatestOfAllTime #Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @thisisysr @actorprashanth… pic.twitter.com/SOgQSGHXEF
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் போஸ்டர் வெளியானது. "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என இப்படத்தின் தலைப்புடன் வெளியாகியுள்ளது தளபதி 68 படத்தில் போஸ்டர்.
#GOAT2ndLook and my personal favorite at 6:00 pm today 🙌🏼😃 #TheGreatestOfAllTime https://t.co/SNIL9OT2PH
— Archana Kalpathi (@archanakalpathi) January 1, 2024
மிகவும் ஆவலுடன் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு நியூ இயர் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளது தளபதி 68 படக்குழு..இந்நிலையில் இன்று ஏதாவது போஸ்டர் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.அதன்படியே இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.