'திரும்புற பக்கமெல்லாம் கஞ்சா..இதுல பாட்டு வேற’ விருமன் பாட்டை பதிவிட்டு ஜெயக்குமார் அரசியல் ட்வீட்!
நல்ல வசூலை பெற்றுள்ள இப்படம் வார இறுதி நாட்களில் தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளோடு திரையிடப்பட்டு வருகின்றது.
விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணால பாடலை வைத்து திமுக அரசை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
View this post on Instagram
விருமன் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், கார்த்தி, அதிதி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். மேலும் நல்ல வசூலை பெற்றுள்ள இப்படம் வார இறுதி நாட்களில் தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளோடு திரையிடப்பட்டு வருகின்றது.
View this post on Instagram
இந்த படத்தில் கருமாத்தூர் மணிமாறன் என்பவர் கஞ்சா பூ கண்ணால என்ற பாடலை எழுதியிருந்தார். சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. பலரும் இதனை ரிபீட் மோடில் கேட்டு கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்ல ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற.. pic.twitter.com/MhgIqchSRf
— DJayakumar (@offiofDJ) August 13, 2022
இந்நிலையில் இப்பாடலை மேற்கொள்காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் தமிழ்நாட்ல ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற.. என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்