Aditi Shankar: ஒருநாளைக்கு 100 தடவை கேட்பேன்...அதிதி ஷங்கர் எந்த பாட்டை சொல்றாங்க தெரியுமா?
காலையிலேயே விருமன் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், கார்த்தி, அதிதி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
![Aditi Shankar: ஒருநாளைக்கு 100 தடவை கேட்பேன்...அதிதி ஷங்கர் எந்த பாட்டை சொல்றாங்க தெரியுமா? Aditi Shankar Frequently Listening vijay song video viral in social media Aditi Shankar: ஒருநாளைக்கு 100 தடவை கேட்பேன்...அதிதி ஷங்கர் எந்த பாட்டை சொல்றாங்க தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/4aa0e77d7e55f3aab550c5eec8c92e4f1660282441570224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விருமன் பட நடிகை அதிதி ஷங்கர் தான் அடிக்கடி கேட்கும் பாடல் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Karthi’s #Viruman will be a wholesome family entertainer and we trust will be remembered for Long..! Special welcome to Aditi Shankar!! We need all your love!!! pic.twitter.com/3mRngv84OS
— Suriya Sivakumar (@Suriya_offl) August 12, 2022
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியது.
#Viruman .... 🔥🔥🔄🔥🔥 #karthi - #AditiShankar 😍#Viruman Blockbuster Movie 🍿 #VirumanFromToday ... Theater Are Celebrating 🌟#VirumanReview - Worth Movie 👌 pic.twitter.com/6ZQ5zHa16j
— Vijay Kumar (@vijaykumarJW) August 12, 2022
காலையிலேயே முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், கார்த்தி, அதிதி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். முன்னதாக படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டது.அந்த வகையில் அதிதி ஷங்கர் பல நேர்காணல்களில் கலந்து கொண்டார். அதில் ஒரு நேர்காணலில் நெறியாளர் அடிக்கடி நீங்கள் கேட்கும் பாடல் எது என்று கேட்கிறார்.
Frequently Asked Song #ArabicKuthu I listen 100 Times A Day
— Chandru (Jcs)™ (@ChandruJ29) August 11, 2022
Actress ~ @AditiShankarofl 🤩🔥@actorvijay @anirudhofficial #Varisu #Viruman pic.twitter.com/Ny0YAUCN7R
அதற்கு அதிதி தற்போது கஞ்சா பூ கண்ணால பாடல் என்றும், அதற்கு முன்னால் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலை கேட்பேன். கிட்டதட்ட ஒருநாளைக்கு 100 முறை அந்த பாடலை கேட்பது வழக்கம் என தெரிவித்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர். அதிதி விருமன் படத்தின் மதுரை வீரன் பாடலை யுவனோடு இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)