அதிதி ராவ் - சித்தார்த் கல்யாணம்.. அதிதி கல்யாண புடவை சிறப்பு தெரியுமா?
Aditi Rao Hydari - Siddharth : பிரபல நடிகர் சித்தார்த்திற்கும், பிரபல நடிகை அதிதிராவிற்கும் மிக எளிமையாக தெலங்கானாவில் இன்று திருமணம் நடைபெற்றது.
Aditi Rao Hydari - Siddharth : பிரபல நடிகர் சித்தார்த்திற்கும், பிரபல நடிகை அதிதிராவிற்கும் மிக எளிமையாக தெலங்கானாவில் இன்று திருமணம் நடைபெற்றது. காதலித்து வந்த ஃபேவரைட் ஜோடிக்கு திருமண வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரபலமான நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தி்யில் மிகவும் பிரபலமானவர். இவரும் நடிகை அதிதி ராவும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்தனர். எந்தவொரு நிகழ்ச்சியிலும் இருவரும் இணைந்தே வந்த நிலையில், இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட சித்தார்த்திற்கு தற்போது 45 வயதாகிறது. மணிரத்னத்தின் உதவி இயக்குனராக திரைத்துறையில் உள்ளே வந்தவர் பாய்ஸ் படம் மூலமாக கதாநாயகன் ஆனார், துறுதுறுப்பான இளைஞராக அறிமுகமான சித்தார்த் தற்போது வரை அதே இளமையுடன் இருப்பது அவரது பலமாக அமைந்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர், 2007ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துள்ள சித்தார்த் மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் அதிதிராவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. 37 வயதான அதிதி ராவ் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
View this post on Instagram
அதிதி ராவின் திருமணப் புடவை மிக எளிமையாகவும், அதே சமயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. உயர்தர காட்டன் சில்க்கில் தங்க பட்டு பார்டர்கள் அமைக்கப்பட்டிருந்ததுதான் அதிதியின் திருமணப்புடவை சிறப்பு. பொதுவாக அனைவரும் முழுப்பட்டுப்புடவையை தேர்வு செய்வது வழக்கம். ஆனால் இது பருத்தியிலான சேலை. இதில் பார்டர்கள் மட்டும் பட்டால் இழைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமன்றி மருதாணி தேர்வு, அரை பிறைபோன்று இடப்பட்டிருந்தது