Actress Vichithra | ஆக்டிவ் மோடில் 90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் விசித்திரா.. புது அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்..
முத்து படத்தில் இவர் கனவு காணும் காட்சியும், பொண்ணுவீட்டுக்காரன் படத்தில் கவுண்டமணியுடன் இவர் நடித்த காமெடி காட்சிகளும் பலத்த வரவேற்பை பெற்றவை.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் ஏற்றுக்கொள்பவர்களுக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. கவர்ச்சி பாத்திரங்கள் ஏற்பவர்களின் வளர்ச்சிக்கு ரசிகர்கள் எப்போதும் துணை நிற்பதுண்டு.
சில்க் ஸ்மிதாவை கவர்ச்சி நடிகை என்று பலர் முத்திரை குத்தினாலும் அந்தக் கவர்ச்சி அழகியலோடு அமைந்திருக்கும். அதேபோல் 90களில் வந்த தமிழ் சினிமாவில் கவர்ச்சி கதாபாத்திரம் ஏற்றவர் விசித்திரா. அவரது கவர்ச்சியும் அழகியலோடு இருக்கும் என ரசிகர்களிடம் கருத்து உண்டு. தமிழில் பொற்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான விசித்திரா, ரசிகன், தலைவாசல், தேவர்மகன், ரிஷி, அமராவதி, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கவர்ச்சி மட்டுமின்றி இவர் காமெடி காட்சிகளிலும் சிறப்பாக நடித்தார். முத்து படத்தில் இவரது கனவு காட்சியும், பொண்ணுவீட்டுக்காரன் படத்தில் கவுண்டமணியுடன் இவர் நடித்த காமெடி காட்சிகளும் பலத்த வரவேற்பை பெற்றவை.
சத்யராஜுடன் நடித்த வில்லாதிவில்லன் படத்தில் எம்.எல்.ஏ கதாபாத்திரம் ஏற்றுக்கொண்ட விசித்திரா அந்தப் படத்தில் அமைச்சர் அம்சவள்ளி ரோலில் அதகளம் செய்திருப்பார். ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் குறைய அவர் கடைசியாக 2002-ஆம் ஆண்டு வெளியான இரவு பாடகன் படத்தில் கடைசியாக நடித்தார். இரவு பாடகன் படத்துக்கு பிறகு திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிய விசித்திரா தனது கணவருடன் இணைந்து ஹோட்டல் தொழிலில் கவனம் செலுத்தினார்.
View this post on Instagram
இந்த சூழலில், 2019ஆம் ஆண்டு வெளியான ராசாத்தி தொடர் மூலம் திரைத்துறைக்குள் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது அவர் மலையாளத்தில் கல்யாணி என்ற சீரியலில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிய விசித்திரா இன்ஸ்டாகிராமில் அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். புகைப்படங்களை கண்ட 90ஸ் கிட்ஸ், இடையில் சில காலம் தொலைந்துபோன தங்களது ஃபேவரைட் நடிகையை மீண்டும் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில் லைக்ஸ்களை வாரி வழங்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்