Actress Trisha: ‘அவள் உலக அழகியே’...புத்தம் புதிய புகைப்படங்களால் ரசிகர்களின் மனதை மயக்கிய த்ரிஷா!
Actress Trisha: கோலிவுட் நாயகி த்ரிஷா, புதியதாக சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கலக்கிய நடிகை த்ரிஷா, அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
திரையுலகில் 20 வருடங்கள்!
1999 ஆம் ஆண்டு, ஜோடி படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்து அறிமுகமானவர் த்ரிஷா. இதுவரை, தமிழ் மட்டுமன்றி பிறமொழி படங்களிலும் பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழைப் பொறுத்தவரை, ரஜினி, கமல், சூர்யா, விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இவர் நடித்த பல கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர், சமீபத்தில் 20 ஆண்டு திரைப்பயணத்தைக் கடந்தார். இதையொட்டி த்ரிஷாவின் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அது குறித்து அப்போது ஒரு பதிவை வெளியிட்டிருந்த நடிகை த்ரிஷா, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
சிம்பிளாக இருந்தாலும் சரி, ஜிகு ஜிகு அணிகலன்களுடன் உடை உடுத்துவதாக இருந்தாலும் சரி, அனைத்து லுக்கிலும் அம்சமாக இருப்பார் நடிகை த்ரிஷா. பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழவிற்கு பிங்க் நிற புடவையில் வந்த இவரை, வாய் பிளந்து பார்த்தனர் ரசிகர்கள். அடுத்தடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட, இவரது போட்டோக்கள் பல வைரலானது. நடிகை த்ரிஷா, வைலட் நிற சல்வார் அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வைலட் நிற உடையில் த்ரிஷா..
View this post on Instagram
காதில் வளைய வகை கம்மல், புதுவித சிகை அலங்காரத்தில், வைலட் நிற உடையணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் பலர், “அவள் உலக அழகியே..நெஞ்சில் விழுந்த அருவியே..”என கண்கள் நிறைய காதலுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் வட்டமடித்து வருகின்றன.