Actress siddhi idnani: நெகிழ வைத்த பேரன்பு.. திடீரென்று முதியோர் இல்லம் சென்ற சிம்பு பட நடிகை.. வைரலாகும் வீடியோ!
2016 ஆம் ஆண்டு வெளியான கிரான்ட் ஹாலி என்ற குஜராத்தி மொழி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சித்தி இத்னானிஜம்போ லகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைந்தார்.
பிரபல நடிகை சித்தி இத்னானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த படம் வெந்து தணிந்தது காடு. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக சித்தி இத்னானி அறிமுகமானார். அறிமுகப்படம் என்ற எண்ணம் ஏற்படாத வகையில் ரசிகர்களை கவர்ந்த அவரை சமூக வலைத்தளங்களில் அப்படத்திற்கு பின் ஏராளமானோர் பின்தொடருகின்றனர். இதனை சித்தி இத்னானியே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரான்ட் ஹாலி என்ற குஜராத்தி மொழி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சித்தி இத்னானிஜம்போ லகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். அதன்பின்னர் 2 படங்கள் தெலுங்கில் நடித்த அவருக்கு, தமிழில் வெந்து தணிந்தது காடு நல்ல அடையாளமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோல் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் நடிக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில் அனைவரிடமும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து உபசரித்துள்ளார். சித்தி இத்னானியின் இந்த செயலை பாராட்டிய அங்குள்ள முதியவர்கள் அவரை வாழ்த்தியும் உள்ளனர். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரை ரசிகர்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்.