மேலும் அறிய

”கலைதான் எங்களை இணைத்தது!” - காதலர் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் மற்றும் ஷாந்தனு இருவருமே ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஸ்ருதிஹாசன் இளம் வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்டவர். மேலை நாட்டு இசைகளை கற்று தேர்ந்தவரும் கூட. தற்போது மும்பையில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசனை சில ஆண்டுகளுக்கு முன்னதாக  லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து வந்தார். அவரை தனது தந்தைக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதி. இருவரும் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் சில , பல காரணங்களால் பிரேக் அப் செய்துக்கொண்டனர். ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் மைக்கேலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கினார். இந்த நிலையில்  சமீப காலமாக பிரபல ஓவியர் ஷாந்தனு ஹசாரிக்காவுடனான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் ஸ்ருதி.

View this post on Instagram
 
A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

 இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிரும் ஸ்ருதிஹாசன் , அதற்கு கொடுக்கும் கேப்ஷன்கள் கிட்டத்தட்ட  இருவருக்குமான காதலை உறுதிப்படுத்துவதாக இருக்கும். இது குறித்து அதிகமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் பேசப்பட்டு வந்த நிலையில் , ஸ்ருதிஹாசன் மற்றும் ஷாந்தனு இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். ஸ்ருதிஹாசன் இது குறித்து கூறுகையில்  “முதன் முதலா நான் யார் இந்த ஷாந்தனு ஹசாரிகானு கூகுள்ல தேடுன பொழுது, அவர் குறித்து வந்த தகவல்களை பார்த்து நான் சிரிச்சுட்டேன், ஷாந்தனுவ முதன் முதலா ஆர்ட் அண்ட் சோல் கண்காட்சியிலதான் பார்தேன் . அவர் வரைந்த ஓவியங்களை அந்த கண்காட்சியில வச்சிருந்தாங்க. அவர் பேச பேச அவரை எனக்கு ரொம்பவே பிடிக்க ஆரமிச்சது.” என ஸ்ருதிஹாசன் விளக்கமளிக்க , ஷாந்தனு தனது விளக்கமாக “ நானும் ஸ்ருதியும் கலையை ரொம்ப நேசிக்க கூடியவங்க. இசை, ஓவியம் என கலைகளை உருவாக்க எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிக்கும். அதன் மூலமாகத்தாம் இருவரும் இணைந்தோம். எங்களை அறியாமலேயே நாங்க ஒருவரை ஒருவர் இன்ஸ்பயர் மற்றும் அட்மயர் ஆகிட்டு இருக்கோம். ஸ்ருதியும் நானும் ஒருவரை ஒருவர் அதிகமாக மதிக்குறோம். நான் எங்களின் குணங்களால இணையல, கலையால இணைந்தோம் . ஸ்ருதிஹாசன் என்னுடைய பெஸ்ட் சோல் மேட் “ என தெரிவித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் மற்றும் ஷாந்தனு இருவருமே ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

தலைப்பு செய்திகள்

Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget