WATCH VIDEO: `நீ வரும்போது நான் மறைவேனா?’ - மகளுடன் நடனம் ஆடும் ஷ்ரேயா.. வைரலாகும் வீடியோ!
சமீபத்தில் தன் மகள் ராதாவுடன் நடிகை ஷ்ரேயா சரண் நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
![WATCH VIDEO: `நீ வரும்போது நான் மறைவேனா?’ - மகளுடன் நடனம் ஆடும் ஷ்ரேயா.. வைரலாகும் வீடியோ! Actress Shriya Saran dances with her daughter Radha in Instagram viral video WATCH VIDEO: `நீ வரும்போது நான் மறைவேனா?’ - மகளுடன் நடனம் ஆடும் ஷ்ரேயா.. வைரலாகும் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/01/1fcfc1b9baf1f53d36c5626e4b0faf0c_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தன் குடும்பத்தினருடனும் மகளுடனும் நடிகை ஷ்ரேயா சரண் வெளியிடும் க்யூட் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் தன் மகள் ராதாவுடன் நடிகை ஷ்ரேயா சரண் நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீல நிற டாப், டெனிம் ஷார்ட்ஸ் பேண்ட் ஆகியவற்றை அணிந்திருந்த ஷ்ரேயா சரண் தன் மகளோடு நடனம் ஆடியுள்ளார். அதோடு அவர், `"I love you forever always, near and fear closer together, everywhere I will be with you, everything I will do for you.' என்றும் தன் மகளை நோக்கி எழுதிக் குறிப்பிட்டுள்ளார். தன் ஸ்டோரி பகுதியில் நடிகை ஷ்ரேயா சரண் வெளியிட்டிருந்த இந்த வீடியோவைப் பிரபல ஆங்கில இணையதளம் பிங்வில்லா வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் தன் கணவர் ஆண்ட்ரெ கொஷ்சீவுடன் மும்பையில் ஷ்ரேயா சரண் டின்னர் சென்றிருந்த படங்களும் வெளியாகியிருந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு, உதய்பூரில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் போது, இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது.
தற்போது நடிகை ஷ்ரேயா சரண், சந்துரு இயக்கத்தில் `கப்ஸா’ என்ற திரைப்படத்தில் மதுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
அதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு வெளியான `திருஷ்யம்’ படத்தின் இந்தி வெர்ஷனின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ஷ்ரேயா சரண். அபிஷேக் பதக் இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தபு ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)