Actress Sharmila: தமிழ்நாட்டில் ஹேமா கமிட்டி தேவையில்லை... நடிகை ஷர்மிலா
தமிழ்நாட்டில் நடிகர் சங்கம் ஸ்டாங்காக இருப்பதாகவும் இங்கு ஹேமா கமிட்டி தேவையில்லை நடிகை ஷர்மிலா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹேமா கமிட்டி
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் நடிகர் திலீப் குமாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக இந்த இந்த குழு விசாரணைச் செய்தது. விசாரணை அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு கேரள அரசிடம் சமர்பிக்கப்பட்ட பின்பும் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் WCC என்கிற பெண்கள் அமைப்பின் மூலம் இந்த அறிக்கையின் முடிவுகளை வெளியிட கேரள அரசுக்கு வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நடிகைகளின் பெயர்கள் நீங்க இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர்கள் சித்திக் , ஜேயசூர்யா , முகேஷ் , இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். குற்றம் சுமத்தப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விராசரணை நடந்து வருகிறது
தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி தேவையில்லை
கேரளாவைத் தொடர்ந்து ஹேமா கமிட்டியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக ராதிகா , விசித்ரா உள்ளிட்ட நடிகைகள் தெரிவித்துள்ளார்கள். ஹேமா கமிட்டியைப் போல் தமிழ்நாட்டிலும் நடிகை ரோகினி தலைமையில் விசாகா கமிட்டி என்கிற குழு அமைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் மீது பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிக்க தடை என்று இந்த குழு முடிவெடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து இருந்து வருவதாக நடிகைகள் ஒரு பக்கம் சொல்லி வரும் நிலையில் அதற்கு மாறான கருத்தை தெரிவித்துள்ளார் நடிகை ஷர்மிலா.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ” தமிழ்நாட்டில் இதுவரை நான் நடித்த படங்களில் நான் கடந்த வந்த பாதையில் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை. தமிழ் சினிமாவில் நடிகர்கள் சங்கம் ஸ்ராங்காக இருக்கிறது. இங்கு ஹேமா கமிட்டி தேவையில்லை என்றுதான் நான் சொல்வேன். ஏனால் இங்கு நடிகர் சங்கத்தில் இருக்கும் விஷால் , நாசர் மற்றும் கார்த்தி ஆகியவர்கள் பவர்ஃபுல்லாக இருக்கிறார்கள். நம்முடைய நடிகர் சங்கமே ஒரு பெரிய வரப்பிரசாதம். அதை எல்லாரும் சரியாக பயண்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்கு என்று தனியாக ஒரு நடிகர் சங்கமாக இல்லாமல் தென் இந்திய நடிகர் சங்கம் என்று இருப்பது எல்லாரும் இதை பயண்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் . நான் தமிழ் பொண்ணு ஆனால் நான் மலையாள படங்களில் தான் நடிக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் இங்கே தான் வர முடியும் “ என்று நடிகை ஷர்மிலா தெரிவித்துள்ளார்.