Samantha: திரைவாழ்கையில் இருந்து நீண்ட பிரேக்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..விளக்கமளித்த சமந்தா தரப்பு!
சமந்தா குறித்து புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தனது திரை வாழ்க்கையிலிருந்து நீண்ட பிரேக் ஒன்று எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. கோலிவுட் டோலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை என கலக்கும் இவரது வாழ்வில் சமீபத்தில் சில சோக நிகழ்வுகள் அரங்கேறியன;
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகை சமந்தா பற்றிய செய்திகள்தான் ரசிகர்களை பரபரப்பாக வைத்து வருகிறது. கடந்த ஆண்டு சமந்தாவின் விவாகரத்து செய்தியால் அதிர்ந்த ரசிகர் கூட்டம், இந்த ஆண்டு அவரது உடல்நிலை பாதிப்பு குறித்த செய்தியை கேட்டு வருத்தமடைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா தான் மயோசிடிஸ் என்னும் தசை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். முன்னதாக சமந்தா தனது சிகிச்சைக்காக அமெரிக்காவும் சென்றிருந்தார். அதன்பின் சமந்தா சிகிச்சை காரணமாக தென்கொரியா செல்ல உள்ளார் என்ற செய்தியும் பரவலாகப் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து சமந்தா குறித்து புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வெளியாகி உள்ள அந்த அப்டேட் என்னவென்றால், நடிகை சமந்தா தனது திரை வாழ்க்கையிலிருந்து நீண்ட பிரேக் ஒன்று எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
யசோதா திரைப்படத்தில் நடித்த பின் நடிகை சமந்தா தனது உடல்நிலை குறித்து அறிவித்தார். யசோதா திரைப்படத்தின் ப்ரோமோஷனின்போது சமந்தாவின் கண்ணீர் பேட்டி இணையத்தை வைரலாக்கியது. அடுத்தடுத்து அவர் சில படங்களிலும் கமிட்டாகியும் இருந்தார். நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் குஷி திரைப்படத்தில் சமந்தா நடித்து வந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 60% நிறைவடைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. அதைத்தொடர்ந்து அவர் ஹாலிவுட்டில் ரஸ்ஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். இந்த நிலையில்தான் அவர் பிரேக் எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் புதிய தகவல் என்னவென்றால், நடிகை சமந்தா எந்த திரைப்படத்திலும் இருந்து விலகப் போவதில்லை என்றும் அவரது பாலிவுட் திரைப்படங்கள் ஆறு மாதங்கள் தள்ளிப் போகலாம். ஆனால் எதிலிருந்தும் அவர் விலகவில்லை என்று அவரது மேலாளர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
Next stop #Shaakuntalam 🫶🥳
— Venkat ~Yashoda in Theaters (@patnana_venkat) November 13, 2022
We are ready papa 😍😍@Samanthaprabhu2
Super excited for this one 🫶
For many reasons 💥@neelima_guna @Gunasekhar1 https://t.co/l5GyTZTSM9 pic.twitter.com/AiftHCeCHp
சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சாகுந்தலம். மகாகவி காளிதாஸ் எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்ட 'சாகுந்தலம்' திரைப்படத்தில் கதையின் நாயகியான சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சமந்தா. நீலிமா குணா தயாரித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் குணசேகரன். அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகை சமந்தாவின் 'யசோதா' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'சாகுந்தலம்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.