Yashoda | `யஷோதா!’ நான்கு மொழிகளில்.. சமந்தா கொடுத்த சூப்பர் அப்டேட்..
நடிகை சமந்தாவின் அடுத்த திரைப்படமான `யஷோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சமந்தாவின் அடுத்த திரைப்படமான `யஷோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில், நடிகை சமந்தா நடிக்கும் `யஷோதா’ திரைப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடத்தப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் அவருக்கென்று வடிவமைக்கப்பட்டிருபப்தாகவும், இது இந்தியா முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
`யஷோதா’ படத்தை இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்குகின்றனர். `ஆதித்யா 369’, `சம்மோஹனம்’ ஆகிய தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்த சிவலேங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்குவதற்கான பூஜை நிகழ்ச்சியின் போது பேசிய தயாரிப்பாளர் சிவலேங்கா கிருஷ்ண பிரசாத் `யஷோதா’ படம் சமகாலத்தில் நிகழும் த்ரில்லர் வகை திரைப்படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். ``தி ஃபேமிலி மேன் 2’ தொடரின் வெற்றிக்குப் பிறகு. நடிகை சமந்தா இந்தியா முழுவதும் பெரிய அளவிலான கவனம் ஈர்த்துள்ளார். அதனால் அவரின் தற்போதைய இமேஜுக்குத் தகுந்தாற்போல, பல தரப்பட்ட பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் விதமாக இந்தத் த்ரில்லர் திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
With your blessings 🙏
— Samantha (@Samanthaprabhu2) December 6, 2021
@SrideviMovieOff @krishnasivalenk
@hareeshnarayan @dirharishankar #Yashoda#YashodaTheMovie pic.twitter.com/OjogcgDvQm
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். `உங்கள் ஆசிகளுடன்’ என்று குறிப்பிட்டு, அவர் `யஷோதா’ குறித்து பதிவிட்டுள்ளார்.
`யஷோதா’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக மணி ஷர்மா, ஒளிப்பதிவாளராக எம். சுகுமார், படத் தொகுப்பாளராக மார்தாண்ட் கே. வெங்கடேஷ், பாடலாசிரியராக ராமஜோகலய்யா சாஸ்திரி ஆகியோர் படக் குழுவினராகப் பணியாற்றியுள்ளனர். மேலும் புலகம் சின்னநாராயணா, சல்லா பாக்கியலஷ்மி ஆகியோர் `யஷோதா’ படத்தின் வசனங்களை எழுதியுள்ளனர்.
நடிகை சமந்தா தன் அடுத்தடுத்த பணிகளாக `சகுந்தலம்’, `காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சர்வதேச அளவில் நடிக்கவுள்ள நடிகை சமந்தா, பிரபலமான `டவுண்டன் அப்பே’ தொடரை இயக்கிய ஃபிலிப் ஜான் இயக்கும் `அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.