Watch Video: சாகுந்தலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா... உடைந்து அழுத சமந்தா! காரணம் என்ன?
சாகுந்தலா - துஷ்யந்தனின் காதல், காந்தர்வத் திருமணம், பிரிவு, இருவரும் ஒன்றிணைந்தார்களா என சுழலும் இந்தக் கதை பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது.

சாகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா உடைந்து அழுத வீடியோ காண்போரை உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.
சமந்தா நடிப்பில் ‘காளிதாஸ்’ எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘சூஃபியும் சுஜாதையும்’ படத்தில் நடித்து கவனமீர்த்த தேவ் மோகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், ருத்ரமா தேவி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநரான குணசேகரன் படத்தை இயக்கியுள்ளார்.
மகாபாரதப் புராணக்கதையின் ஒரு பகுதியான சகுந்தலா - துஷ்யந்தன் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சாகுந்தலா - துஷ்யந்தனின் காதல், காந்தர்வத் திருமணம், பிரிவு, இருவரும் ஒன்றிணைந்தார்களா என சுழலும் இந்தக் கதை பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது.
இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது சமந்தா மேடையிலேயே உடைந்து அழுதது அங்கிருந்தோரை பெரும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது.
View this post on Instagram
பிப்.17 ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்.17ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் மயோசிட்டிஸ் பாதிப்பிலிருந்து மீண்ட சமந்தா, இந்த ட்ரெய்லரில் சகுந்தலாவாக மாறி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
முன்னதாக சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகளில் தான் முழுவீச்சில் ஈடுபடும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்திருந்தார். ”இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம், இழப்பு என அனைத்துக்கும் கலை தான் சிகிச்சை. அதன் மூலம் நான் குணம்பெற்று வீட்டுக்கு செல்வேன்” என தான் டப்பிங் பணிகளில் ஈடுபடும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்திருந்தார்.
விஜய் தேவரகொண்டாவுடன் குஷி, ஆங்கிலப் படமான ’அரேஞ்மெண்ட் ஆஃப் லவ்’, வெப் சீரிஸ் ’சிட்டடல்’ என அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் சமந்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.





















