டி51 படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வீடியோ வெளியிட்ட நடிகை
தனுஷின் டி51 படத்தில் பிரபல ஹீரோயின் இணைந்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷின் 51வது படத்தில் ஹீரோயினாக தான் நடிப்பதாக ராஷ்மிகா மந்தனா வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தனுஷ் நடித்திருந்த வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளில் வெளியானது. அதை தொடர்ந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கி வெற்றி கண்ட அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளனர். சுதந்திரத்திற்கு முந்திய பீரியட் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் வரும் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களை தவிர நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த நிலையில் கேப்டன் மில்லரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அடுத்ததாக வெளியான படத்தின் டீசரும் கேப்டன் மில்லரில் சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பதை கூறுகிறது.
டீசர் மற்றும் போஸ்டரில் இடம் பெற்றிருந்த போர்ச்சூழலும் எங்கும் கிடக்கும் சடலங்களும், தனுஷின் வித்யாசமான கேரக்டரும் திரையில் தனுஷின் புதுவித நடிப்பை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நேர்த்தியான கதை மற்றும் இயக்குநர்களை தேர்வு செய்து நடித்து வரும் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் வெற்றிப்பெற்று வருகிறார்.
கேப்டன் மில்லரை தொடர்ந்து டி50 படத்தில் தனுஷ் கமிட் ஆகி உள்ளார். தனுஷின் இயக்கத்தில் எஸ்கே சூர்யா, அபர்ணா முரளி, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டி50 படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் டி51 படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் தனுஷின் டி51 படத்தில் பிரபல ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகியுள்ளது.
Beginning of a new journey.💃🏻❤️#D51
— Rashmika Mandanna (@iamRashmika) August 14, 2023
A @sekharkammula film 🎥@dhanushkraja @AsianSuniel @puskurrammohan #AmigosCreations @SVCLLP pic.twitter.com/dQFghtqd6R
இதற்கிடையே தனுஷுடன் நடிப்பது குறித்த வீடியோவை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வரவிருக்கும் புஷ்பா 2, அனிமர், ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா டி51 படத்தில் இணைந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா, சுல்தான், புஷ்பா, சீதா ராமம், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் 2024ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் அருவா படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தனக்கென தமிழ் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
மேலும் படிக்க: Independence Day 2023: சுதந்திர தின விழாவுக்கு ஜீ தமிழ் சேனலில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள்? - வாங்க பார்க்கலாம்..!
Jailer: ‘ஜெயிலர்’ ரஜினி மருமகளுக்கு இப்படி ஒரு பின்னணியா? .. இத்தனை நாளா தெரியாம போச்சே..!