Rashmika: ரூ.80 லட்சம் அபேஸ்... கைவரிசை காட்டிய பலே மேனேஜர்: அதிரடியாக ராஷ்மிகா மந்தனா எடுத்த நடவடிக்கை!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர் அவரிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததால் அவரை ராஷ்மிகா பணிநீக்கம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர். இவர் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் பான் இந்தியா அளவில் ரசிகர்களை கொண்ட நடிகையாக ராஷ்மிகா உள்ளார். பல்வேறு மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படம் அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. தொடர்ந்து அவர் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
ரஷ்மிகா மந்தனா, தற்போது அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராஷ்மிகாவிடம் நீண்ட காலமாக பணிபுரிந்த அவரது மேலாளர் அவரிடம் இருந்து 80 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து ராஷ்மிகா இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. சிறிது சிறிதாக நடைபெற்ற இந்த மோசடியை கண்டறிந்த ராஷ்மிகா உடனடியாக அவரை வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. திரை உலகினர் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக 'அனிமல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, கார்த்தியின் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அடுத்து விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். ரஞ்சிதமே பாடலுக்கு விஜய் உடன் இவர் சேர்ந்து ஆடிய டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ளம் திரைப்படம் ஆகும்.
மேலும் படிக்க