Rakul Preet Singh: தோள்பட்டையில் கட்டுடன் வந்த ரகுல் ப்ரீத் சிங்... கவலை தெரிவிக்கும் ரசிகர்கள்!
ரகுல் ப்ரீத் சிங் தோள் பட்டை பகுதியில் கட்டுடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தோள்பட்டையில் அடிபட்ட கட்டுடன் வலம் வரும் வீடியோ அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
டோலிவுட் தன் வெற்றிப்பாதையைத் கோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் இறுதியாக செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்த ரகுல் ப்ரீத், தற்போது இந்தியன் 2 படப்பணிகளில் பிஸியாக உள்ளார். மற்றொருபுறம் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரகுல் நடித்துள்ள அயலான் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தோள் பட்டை பகுதியில் கட்டுடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து ஒர்க் அவுட் வீடியோக்களை ரகுல் பகிர்ந்து வரும் நிலையில், அவருக்கு உடற்பயிற்சியின்போது அடிபட்டிருக்கலாம் எனவும், கழுத்து, முதுகு வலிக்கு அணியும் கே டேப்பை ரகுல் ப்ரீத் அணிந்துள்ளதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
சமூக வலைதளத்தில் படுஆக்டிவாக செயல்பட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் முன்னதாக நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பொது இடங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஜோடியாக இவர்கள் காணப்பட்ட நிலையில் இருவரும் ரகசியத் திருமணம் செய்துக்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், திருமணம் குறித்து தன் வீட்டினரிடம் தான் கேட்க வேண்டும் என ரகுல் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.
இந்தியில் மேரி பத்னி கா ரீமேக் எனும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிகர் அர்ஜூன் கபூர் உடன் இணைந்து தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.