Priyanka Nair | ‛விருப்பம் இல்லாமல் பசுபதியுடன் நடித்தேன்....’ ‛உருகுதே’ நடிகை பிரியங்கா நாயர் ‛மருகிய’ பேட்டி!
Priyanka Nair | தற்போது மீண்டும் சினிமாவில் ரீ- எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம் பிரியங்கா அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான......

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெயில். பரத் , பசுபதி, பாவனா, பிரியங்கா நாயர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெயில் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர்தான் பிரியங்கா நாயர். குறிப்பாக ‘உருகுதே மருகுதே ‘ என்னும் பாடலில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும் .
படத்தில் பசுபதியுடன் நடிக்க பிரியங்கா நாயருக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாமல்தான் இருந்ததாம் . இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பதிலளித்த அவர், படத்தில் அவ்வளவு விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன். ஆனல் இப்போது பார்க்கும் பொழுது வசந்தபாலன் சார் என்ன மாதிரியான கதாபாத்திரம் நமக்கு கொடுத்திருக்கிறார். அந்த பாடல் அவ்வளவு ஹிட் ஆவதற்கு பசுபதி சார் மாதிரியான பெரிய நடிகர்கள் எனக்கு கொடுத்த ஸ்பேஸ்தான் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் அப்படியான சிறந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு இப்போ பெருமையாக இருக்கு” என்கிறார் பிரியங்கா நாயர்.
View this post on Instagram
ஆரம்ப காலத்தில் பிரியங்கா நாயர் நடிக்க வந்த பொழுது சினிமாவை எப்படி அனுக வேண்டும் என தெரியாமல் இருந்தாராம். இதனாலேயே சினிமா இயக்குநர்கள் பலருக்கும் , குறிப்பாக வசந்தபாலனுக்கு தான் மிகவும் தொல்லை கொடுத்தாக தெரிவிக்கிறார்,. இயக்குநர்கள் காட்சிகளை விளக்கும் பொழுது, நான் அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்.. இது வேண்டாம் சார் என மறுப்பு தெரிவித்தாக கூறும் பிரியங்கா நாயர் , நான் அப்படியெல்லாம் செய்திருக்கக்கூடாது என்கிறார். பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த அவர் மோகன்லால் , மம்முட்டி போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகன் ஒருவரும் உள்ளார். தற்போது மீண்டும் சினிமாவில் ரீ- எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம் பிரியங்கா அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான வில்லி கதாபாத்திரம் என சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளார்.
View this post on Instagram





















