Priyamani: துன்புறுத்தப்படும் கோயில் யானைகள்.. பிரியாமணி செய்த செயலால் நெகிழ்ந்த பக்தர்கள்!
கேரளாவில் திருக்கயில் மகாதேவா கோயிலுக்கு இயந்திர யானையை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் நடிகை பிரியாமணி
யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக பீட்டா அமைப்புடன் சேர்ந்து இந்த நண்கொடையை அவர் வழங்கியுள்ளார்.
பிரியாமணி
கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. அவர் நடித்த பருத்திவீரன் படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தமிழ், மலையாளம், இந்தி , கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நாயகியாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். யாமி கெளதம் நடித்து சமீபத்தில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிப்பு தவிர்த்து சமூக செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் பிரியாமணி. தற்போது பீட்டா அமைப்புடன் சேர்ந்து கேரள கோயில் ஒன்றுக்கு இயந்திர யானையை நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரியாமணி.
யானைகளை பாதுகாக்கும் முயற்சி
இந்தியாவில் யானை மனிதர்களால் துன்புறுத்தப் படுவதில் இருந்து தடுக்கும் விதமாக கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய அரசு வனத்துறைப் பாதுக்காப்பு சட்டத்தில் புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. யானைகள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு வாகனம் வழி கொண்டு செல்லப்படக்கூடாது என்றது இந்த சட்டம். கேரள மாநிலத்தின் கோயில் திருவிழாக்களில் யானைகள் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகின்றன. பிரம்மாண்டத்தையும் பெருமையை பறைசாற்றும் விதமான இந்த யானைகள் மக்களால் பார்க்கப்படுகின்றன.
ஆனால் அதே நேரத்தில் யானைகள் பணத்திற்காக வாடகைக்கு விடப்படுவதாகவும் , லீஸுக்கு விடப்படுவதாகவும் யானை முதலாளிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த. திருவிழாக்களுக்கு என்று வளர்க்கப் படும் யானைகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் இதன் காரணமாக யானைகள் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாகவும் விலங்கியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் யானைகள் இல்லாமல் தங்களது கலாச்சார நிகழ்வுகள் முழுமையடைவதில்லை என்று கூறிவருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக விலங்குகளை பாதுக்காக்கும் அமைப்பான பீட்டா ஒரு முனெடுப்பை எடுத்தது. பீட்டா அமைப்புடன் இணைந்து நடிகை பார்வதி திருவோத்து முதல் முறையாக இயந்திர யானை ஒன்றை திருச்சூரில் நிறுவினார்.
JUMBO NEWS!
— PETA India (@PetaIndia) March 17, 2024
PETA India and actor #Priyamani offer Kochi’s first lifelike mechanical elephant, Mahadevan, to Thrikkayil Mahadeva Temple for Nadayiruthal, encouraging everyone to let real elephants live happily with their families in their jungle homes. https://t.co/0PBykqoCGN… pic.twitter.com/8btUhMr9BH
தற்போது இதே முன்னெடுப்பை நடிகை பிரியாமணி எடுத்துள்ளார். கொச்சி அருகில் இருக்கும் திருக்கயில் மகாதேவா கோயிலுக்கு இயந்திர யானையை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் நடிகை பிரியாமணி. இந்த யானைக்கு மகாதேவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . இது குறித்து அவர் கூறுகையில் ”மக்கள் தங்களது கலாச்சார நிகழ்வுகளை மகிழ்ச்சியாக விலங்குகளின் நலத்தையும் பாதுக்காக்கும் வகையில் கொண்டாட இந்த இயந்திர யானையை நன்கொடையாக வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது.”