Actress Premi: நான் கர்ப்பமாக இருக்கும்போது மகேந்திரன் என்ன பண்ணாரு தெரியுமா? - நடிகை பிரேமி உருக்கம்
7 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பிரேமி தொடர்ந்து ராமராஜன் நடித்த தங்கமான ராசா படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து ரீ-எண்ட்ரீ கொடுத்தார்.
மறைந்த இயக்குநரும், தனது கணவருமான மகேந்திரனுடனான இனிமையான தருணங்களை நடிகை பிரேமி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை பிரேமி சினிமாத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 1964 ஆம் ஆண்டு நடிக்க வந்த அவர் 90களின் காலக்கட்டத்தில் வரை மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தார். உதிரிப்பூக்கள் படம் வரை மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த பிரேமி, அப்படத்தின் இயக்குநர் மகேந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் பிரிந்தனர். மகேந்திரன் - பிரேமி திருமண விவகாரம் பலருக்கும் இன்றளவும் தெரியாது.
இந்த 7 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பிரேமி தொடர்ந்து ராமராஜன் நடித்த தங்கமான ராசா படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து ரீ-எண்ட்ரீ கொடுத்தார். மகேந்திரனுடன் வாழ்ந்த 7 ஆண்டுகாலத்தில் அவர் அடுத்தடுத்த தோல்விகளை தழுவியிருந்தார். இதனால் தையல் தைப்பது, அப்பளம் தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளிலும் பிரேமி ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் தனது கணவரும், இயக்குநருமான மகேந்திரன் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், “நடிக்கத் தெரியாதவர்கள் கூட மகேந்திரனிடம் வந்தால் சூப்பரா நடிப்பார்கள். அவர் நல்லா நடிச்சிக்காட்டி அந்த கேரக்டரை பக்குவப்படுத்துவார். அவரின் இயக்கத்தை எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். எனக்கு நடிகையாக மகேந்திரன் இயக்கத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. உதிரிப்பூக்கள், ஜானி படத்தில் எல்லாம் நல்ல கேரக்டர்கள் அமைந்தது.
ஜானி படத்தில் நடித்த பிறகு ஏராளனான பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் மகேந்திரன் என்னை நடிக்க விடல. வேண்டாம் என சொல்லி விட்டார். மகேந்திரன் தான் என்னை பார்த்துக் கொண்ட என்ற நிலையில் பேச்சை மீற முடியவில்லை. ஒருவேளை நான் தொடர்ந்து நடித்திருந்தால் எங்கேயோ சென்றிருப்பேன்.
மகேந்திரனுடனான இனிமையான தருணங்கள் நிறைய உள்ளது. 7 ஆண்டுகள் தான் ஒன்றாக இருந்தோம். ஆனால் அது 70 ஆண்டுகளுக்கு சமமானது. அவ்வளவு நல்லா பார்த்துகிட்டாரு. நான் கருவுற்றிருக்கும்போது உலக திரைப்பட விழாவுக்கு நடுவராக டெல்லிக்கு சென்றிருந்தார். என்னையும் அழைத்து சென்றார். அங்கே இருந்த பெண், ‘பெண்கள் எல்லாம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்கே ஒரு நாளைக்கு 5, 6 படங்கள் பார்க்க வேண்டும். ஆனால் என் மனைவி இல்லாமல் படம் பார்க்க வர மாட்டேன் என கூறி விட்டார். அதன்பிறகே உள்ளே அனுமதித்தார்கள்.
கிட்டதட்ட 8 நாட்கள் மகேந்திரனுடன் உட்கார்ந்து 6 படங்கள் வரை பார்ப்பேன். இதெல்லாம் யாருக்காது கிடைக்குமா?- கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அருமையா வாழ்ந்தேன்’ என அந்த நேர்காணலில் பிரேமி தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க: Actress Premi: ’மகேந்திரனை திருமணம் செய்ததே தவறு.. தண்டனை அனுபவிச்சிட்டேன்’ .. நடிகை பிரேமி உருக்கம்..