Actress Pranitha: கணவருக்கு பாதபூஜை செய்த நடிகை ப்ரணிதா.! சோஷியல் மீடியாவில் கிளம்பிய ஆதரவும் எதிர்ப்பும்!!
நடிகை ப்ரணிதா தனது கணவருக்கு பாத பூஜை செய்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ப்ரணிதா தனது கணவருக்கு பாத பூஜை செய்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் கார்த்தியுடன் ‘சகுனி’ சூர்யாவுடன் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு பெங்களூர் தொழிலதிபர் நித்தின் ராஜூவை திருமணம் செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து தனது கணவரின் பிறந்தநாளில் கர்ப்பமான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த ப்ரணிதா தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களையும், அது தொடர்பான தனது கருத்துக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.
View this post on Instagram
இந்த நிலையில் அவர் அண்மையில் பெண் குழந்தையை பிறந்தது. அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் மருத்துவர்களுக்கு நன்றி கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் பீமா அமாவாசையான நேற்றைய முன் தினம் தனது கணவருக்கு பாத பூஜை செய்திருக்கிறார்.
View this post on Instagram
பொதுவாக அந்த ஊர் வழக்கப்படி திருமணமான பெண்கள் பீமா அமாவாசை தினத்தில் கணவருக்கு பாதபூஜை செய்வது வழக்கமாம். அந்த வழக்கத்தின் படியே, அவர் இதனை செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த போட்டோவை பார்த்த இன்ஸ்டாவாசிகள் சிலர் மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் வழக்கத்தை கடைபிடிக்கிறாரே என பாராட்டியுள்ளனர். இன்னொரு தரப்பினரோ வழக்கமாவே இருந்தாலும் இதெல்லாம் மாற்றப்பட வேண்டிய ஒன்று என்றும், பிரணிதா போன்ற படித்தவர்கள் இதனை தவிர்த்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.