Watch Poorna BabyShower: கேரள முறைப்படி வேட்டி கட்டி வளைகாப்பு... நிறைமாத கர்ப்பிணியாக இதயங்களை அள்ளும் பூர்ணா!
சென்ற ஆண்டு துபாயைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஷானித் ஆசிஃப் அலி என்பவரை மணந்து கொண்ட பூர்ணா, தொடர்ந்து தனது வளைகாப்பு புகைப்படங்களை சென்ற மாதம் பகிர்ந்திருந்தார்.
கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த இஸ்லாமியரான நடிகை பூர்ணாவுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது.
2004ஆம் ஆண்டு தொடங்கி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் கோலோச்சி வருபவர் நடிகை ஷாம்னா காசிம் எனும் பூர்ணா. பரதநாட்டியம் உள்பட பல நடனக்கலைகளையும் கற்றுத் தேர்ந்த நடிகையான பூர்ணா, 2004ஆம் ஆண்டு மஞ்சு போலோரி பெண்குட்டி எனும் மலையாளப் படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் மெட்டி ஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானார்.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகை அசினை பூர்ணா பெரிதும் நியாபகப்படுத்திய நிலையில், நடிகர் விஜயிடம் அசினைப் போலவே வருவார் எனும் பாராட்டுகளையும் அன்றைய காலக்கட்டத்தில் பெற்றார்.
தொடர்ந்து நகுல் உடன் கந்தகோட்டை, இயக்குனர் சுதா கொங்கராவின் துரோகி, அர்ஜூனன் காதலி, ஆடு புலி ஆட்டம் உள்ளிட்ட பல படங்களில் கவனமீர்த்தார். இயக்குனர் மிஷ்கின் உடன் சவரக்கத்தி படத்தில் நடித்ததுடன், 2021ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவான தலைவி படத்தில் சசிகலாவாக நடித்து கவனமீர்த்திருந்தார் பூர்ணா.
மற்றொருபுறம் இணைய தொடர்களிலும் நடித்து வரும் பூர்ணா, தொலைக்காட்சி ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்குபெற்று வருகிறார்.
தெலுங்கில் பேய் படங்களில் நடித்து டோலிவுட் ரசிகர்களை பயத்தில் உறையவைத்த பூர்ணா, தமிழில் சசிகுமார் உடன் நடித்த கொடிவீரன் படத்தில் தன் கெட் அப்புக்காக முழுவதுமாக மொட்டையடித்து நடித்து பாராட்டுகளை அள்ளியுள்ளார்.
சென்ற ஆண்டு துபாயைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஷானித் ஆசிஃப் அலி என்பவரை மணந்து கொண்ட பூர்ணா, தொடர்ந்து தனது வளைகாப்பு புகைப்படங்களை சென்ற மாதம் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பூர்ணாவின் சொந்த ஊரான கண்ணூர் இஸ்லாமிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஏழு மாத கர்ப்பிணியான பூர்ணாவுக்கு கண்ணூர் இஸ்லாமிய முறைப்படி வேட்டி கட்டி வளைகாப்பு நடத்தப்படும் வீடியோவும், ஃபோட்டோக்களும் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
View this post on Instagram
நடிகை பூர்ணா தற்போது நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாகத் தயாராகி வரும் தசரா படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.