மேலும் அறிய

Parvathy Thiruvothu : பெண்கள் தொற்றுநோயைப் போல் தவிர்க்கப் படுகிறார்கள்; ஆஸ்கர் பரிந்துரை பட்டியலால் கடுப்பாகிய பார்வதி

தங்கள் மதிப்பை உணர்ந்து பேசும் பெண்கள் தொற்றுநோய்களைப் போல் தவிர்க்கப் படுகிறார்கள் என்று நடிகை பார்வதி திருவொத்து தெரிவித்துள்ளார்

ஆஸ்கர் விருதுகளுக்கு பார்பீ படத்தின் இயக்குநர் கிரெட்டா கெர்விக் மற்றும் நடிகை மார்கரட் ராபீ ஆகிய இருவரும் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை பார்வதி திருவேது.

ஆஸ்கர் 2024

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் கடந்த சில நாட்கள் முன்பு வெளியிடப் பட்டது. வரும் மார்ச் மாதம் இந்த விருது விழா நடைபெற இருக்கிறது. இந்த பரிந்துரைப் பட்டியலில் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் மக்களைக் கவர்ந்த பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக பெண் இயக்குநர்கள் இயக்கிய மூன்று படங்கள் இந்தப் பட்டியலில் இருப்பது உற்சாகமளிப்பதாக அமைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த பட்டியலில் ஒரு சில பெயர்கள் இல்லாதது ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

பார்பீ

கடந்த ஆண்டு ஒப்பன்ஹெய்மர் படத்துடன் வெளியாகி உலகளவில் கவனம் ஈர்த்த படம் பார்பீ. கிரெட்டா கெர்விக் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ரயன் கோஸ்லிங் மற்றும் மார்கரட் ராபீ இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். பார்பீ திரைப்படம் உலகளவில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனைப் படைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் கிரெட்டா மற்றும் நடிகை மார்கரட் ஆகிய இருவரும் ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்த ரயன் கோஸ்லிங் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

தன்னைத் தவிர்த்து தன் படக்குழுவினரின் பெயர்கள் இடம்பெறாதது குறித்து பேசிய அவர்  “ பல்வேறு குறிப்பிடத்தக்க கலைஞர்கள் இடம்பெற்ற பட்டியலின் என்னுடைய பெயரும் இடம்பெற்றிருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தில் கேன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு இந்த பெருமை கிடைத்திருப்பது மகிழ்ச்சி, ஆனால் பார்பீ இல்லாமல் கேன் இல்லை. இயக்குநர் கிரெட்டா இல்லாமல் பார்பீ படம் இல்லை. உலகம் முழுவதும் கொண்டாடும் சாதனைப் படைத்த இந்தப் படத்தை உருவாக்கியவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இல்லாதது வருத்தமளிக்கிறது. “ என்று ரயன் கோஸ்லிங் தெரிவித்திருந்தார்.

மனவருத்தம் தெரிவித்த பார்வதி

ரயன் கோஸ்லிங்கின் அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை பார்வதி திருவேது “ இது எனக்கு வலியை தருகிறது. காரணம் இங்கு ரயன் கோஸ்லிங் போல் யாரும் இருப்பதில்லை. திறமையோ தகுதியோ இங்கு முக்கியமாக இருப்பதில்லை. தங்கள் மதிப்பை உணர்ந்து பேசும் பெண்கள் தொற்றுநோய்களைப் போல் தவிர்க்கப் படுகிறார்கள். இப்படி தகுதியானவர்களை உயர்த்த இப்படி தங்களது குரலை பயன்படுத்தும் நண்பர்கள் இருப்பது மகிழ்ச்சிதான்”  என்று கூறியுள்ளார்

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget