மேலும் அறிய

Neena Gupta: முத்தக்காட்சியில் நடித்தப்பின் டெட்டால் போட்டு வாயை கழுவினேன்... மனம் திறந்த பிரபல நடிகை

இந்தி நடிகை நீனா குப்தா தான் ஒரு முத்தக் காட்சியில் நடித்து முடித்ததும் டெட்டால் போட்டு வாயை கழுவியதாக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகை நீனா குப்தா 1982 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சாத் சாத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டு வெளியான படாய் ஹோ திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் தனது நடிப்பை தொடங்கி உள்ளார். 63 வயதான நீனா குப்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது அனுபவம் குறித்து நீனா குப்தா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது: ”ஒரு நடிகராக நீங்கள் எல்லா வகையான காட்சிகளிலும் நடிக்க வேண்டும், சில சமயங்களில் சேற்றில் அடியெடுத்து வைக்க வேண்டும், சில சமயங்களில் வெயிலில் பல மணி நேரம் நிற்க வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்பு, நான் திலீப் தவானுடன் ஒரு சீரியலில் நடித்தேன். இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்முதலில் லிப்லாக் முத்தக் காட்சி இடம் பெற்ற தொடர் அது. என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.  திலீப் என்னுடைய நண்பர் அல்ல. என்னுடன் பழகியவர் அவ்வளவு தான். அவர் மிகவும் அழகானவர் ஆனால் முத்தக் காட்சியில் நடிப்பது தான் பிரச்சனை. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் அந்த காட்சிக்கு தயாராக இல்லை. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், ஆனால் அதைச் சமாளிக்க நான் என்னை சமாதனப்படுத்தி, தயார்படுத்திக் கொண்டேன் நான் ஒரு நடிகை என்பதை நினைவில் கொண்டு அந்த முத்தக் காட்சியில் நடிப்பதற்கான துணிச்சலை வரவைத்துக் கொண்டேன்.

சிலரால் கேமரா முன் நகைச்சுவை செய்ய முடியாது, சிலரால் கேமரா முன் அழ முடியாது. நான் முத்தமிடும் காட்சியில் நடிப்பதற்கு பதட்டமடைந்தேன். அது முடிந்தவுடன், டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன். எனக்குத் தெரியாத ஒருவரை முத்தமிடுவது மிகவும் கடினமாக இருந்தது” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க 

Crime: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் திருமணம்.. மணநாளில் மணப்பெண்ணை கொலை செய்த உறவுக்கார இளைஞர்..

Kannada Actor Accident: முதல் படம் வெளியாக இருந்த நிலையில் விபத்து: காலை இழந்தார் கன்னட நடிகர் சூரஜ்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget