Nayanthara: ஆடிப்போன பாலிவுட்; ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா; என்ன பேசினார் தெரியுமா?
Nayanthara: தாதா சாகேப் பால்கே சர்வதேச விருதுகள் 2024 மேடையில் நடிகை நயன்தாரா தமிழில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மும்பையில் 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவில் மஞ்சள் நிற சேலையில் வருகை தந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வந்தது. இந்நிலையில் நேற்று விருதுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நயன்தாரா இன்று விருதினைப் பெற்றுக்கொண்ட பின்னர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார். ஜவான் படத்துக்காக தாதாசாகேப் விருதினைப் பெற்றுள்ள நடிகை நயன்தாராவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா பகிர்ந்துள்ள வீடியோவில், இந்த படம் உருவாக்கப்பட்ட காலம் தொடங்கி இதுவரை நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பிற்கு நன்றி என ஷாருக்கானுக்கு நன்றி சொன்னார். அதன் பின்னர் ஹிந்தியில் தனது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், ஜவான் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். தனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மட்டும் இல்லை என்றால் என்னால் இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்க முடியாது என தெரிவித்தார். அதன் பின்னர் தமிழில் பேசிய நயன்தாரா, ” என்னைக்கும் என்னோட இருக்கும் உறவுக்கும் உலகுக்கும் உயிருக்கும் என்னோட எல்லாமான விக்கிக்கும் ஆயிரம் கோடி நன்றிகள். கலைக்கும் காதலுக்கும் நன்றி, அன்புக்கும் ஆண்டவனுக்கும் நன்றி” என பேசினார்.
View this post on Instagram
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நயன்தாராவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.