Parthiban : 23 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடன்.. பார்த்திபன் உருகி பதிவுசெய்த போஸ்ட்.. குவியும் லைக்ஸ்..
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மும்தாஜ் தனது கஷ்டத்திற்காக நடிகர் பார்த்திபனிடம் பணம் வாங்கியுள்ளார். அந்த உதவியை நினைவில் வைத்திருந்த மும்தாஜ், தற்போது வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
மல மல பாடல் மூலம் நன்கு பரிட்சியமானவர் மும்தாஜ். மோனிஷா என் மோனலிசா படத்தில் அறிமுகம் என்றாலும் குஷி படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்தார். பின்னர் பல்வேறு படங்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மும்தாஜ் தனது கஷ்டத்திற்காக நடிகர் பார்த்திபனிடம் பணம் வாங்கியுள்ளார். அந்த உதவியை நினைவில் வைத்திருந்த மும்தாஜ், தற்போது வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். மேலும், நீங்கள் அந்த நேரத்தில் எனக்கு தக்க உதவி செய்தீர்கள். நீங்கள் ஒரு நேர்மையான மனிதர். உங்களையும், உங்கள் குடும்பத்தை எல்லாமும் ஆன கடவுள் ஆசிர்வதிப்பார் என தெரிவித்துள்ளார். நடிகை மும்தாஜின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வந்தது.
திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் ‘நாளை’என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார்.தொடர்ந்தால் யாவும் ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார்.மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை>1/2 pic.twitter.com/njmL27hAlZ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 28, 2022
>1/2/தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்!தினமும் ஒரு நல்லது செய்ய முயற்சிக்கிறேன்.இன்றும் செய்தேன்.அதையெல்லாம் நான் சொல்வதில்லை.அவையாவும் அகத்தின் vacuum cleaner.பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல அப்படியிருக்க இதில்…நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே! pic.twitter.com/O9Iy7tD3Uq
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 28, 2022
இதையடுத்து நடிகர் பார்த்திபனும் தனது ட்விட்டர் பக்கத்தில் மும்தாஜை பாராட்டியுள்ளார். அதில், நண்பர் ரியாஸ்” actress மும்தாஜ் உங்களை meet பண்ண time கேக்குறார்” நான்”என்ன விஷயம்னு கேளுங்க” அவர்” உங்ககிட்டதான் சொல்லணுமாம்” பர்தாவுக்குள் மிக பாந்தமாக வணங்கி ”23 வருஷத்துக்கு முன்னால எனக்கு நீங்க செஞ்ச உதவி ஞாபகமிருக்கா!” இல்லையானேன். “ரொம்ப அவசியமான நேரத்தில என்ன ஏதுன்னு..
தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்!தினமும் ஒரு நல்லது செய்ய முயற்சிக்கிறேன்.இன்றும் செய்தேன்.அதையெல்லாம் நான் சொல்வதில்லை. அவையாவும் அகத்தின் vacuum cleaner. பெருமையே தவிர, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல அப்படியிருக்க இதில்…நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே! “ என தெரிவித்துள்ளார்.