தனுஷூடன் ரகசிய திருமணமா ? வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த மிருணாள் தாகூர்
நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பரவி வந்த தகவலுக்கு நடிகை தரப்பு விளக்கமளித்துள்ளது

கடந்த சில நாட்களாக சமூக வலைதளம் முழுவதும் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்த பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இருவரும் வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது. இதுகுறித்து தற்போது மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2024 ஆம் ஆண்டு தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார். சீதா ராமம் படத்தின் மூலம் கவனமீர்த்த நடிகை மிருணாள் தாகூரை தனுஷ் காதலித்து வருவதாக கடந்த ஆண்டு முதல் பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. மேலும் மிருணாள் தாகூரின் படத்தின் ப்ரோமோஷனுக்கு தனுஷ் சென்றதும் இந்த வதந்தியை உறுதிபடுத்தும் விதமாக அமைந்தது. இப்படியான நிலையில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் பரவின. இருதரப்பு ரசிகர்களும் இந்த தகவல் உண்மை என நம்பத் தொடங்கிவிட்டார்கள்.
வதந்திகளை மறுத்த மிருணாள் தாகூர்
நாளுக்கு நாள் பரவலாக பேசுபொருளாகி வந்த நிலையில் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மிருணாள் தாகூர் தரப்பினர். தனுஷ் உடனான திருமணம் குறித்து வெளியான தகவல் உண்மையில்லை என மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் தனுஷ் மற்றும் மிருணாள் ஆகிய இருவரும் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக் எந்த விளக்கமும் வெளியிடவில்லை.





















